வயதானவர்கள் ஏன் கோயிலுக்குச் செல்கிறார்கள்..?

ஞானகுரு பதில்கள்

ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.

கேள்வி  ; சமூகத்தில் குற்றங்கள் பெருக என்ன காரணம்?

  • எஸ்.முருகன், கோத்தகிரி.

ஞானகுரு :

சொகுசுதான் காரணம். உணவு, உடை, உறையுள் போன்றவற்றில் திருப்தி அடையாதவரும், சக மனிதனால் புறக்கணிக்கப்பட்டவரும் குற்றவாளியாக மாறுகிறார். புதுசுபுதுசாக அறிமுகமாகும் அத்தனை சொகுசுகளையும் அடைவதற்கு விரும்பும் ஆசையே ஊழலாக, லஞ்சமாக, குற்றமாக உருமாறுகின்றன. புத்தர் சொன்னதுதான், ஆசையே குற்றத்துக்கும் காரணம்.

கேள்வி : வயதானவர்கள் கோயிலுக்கு அதிகமாக செல்வது ஏன்?

  • ஏ.முனீஸ்வரி, சாத்தூர்.

ஞானகுரு :

வீடு, அலுவலகத்தில் தன் பேச்சு எடுபடாதபோது, தான் சொல்வதை பிறர் கேட்காமல் நடக்கும்போது மனிதர்கள் முன்பை விட அதிகமாக கடவுளை நம்பத் தொடங்குகிறார்கள். தன்னுடைய சோகத்தை கடவுள் எந்த மறுப்பும் சொல்லாமல் கேட்பான் என்ற நம்பிக்கையில்தான் கோயிலுக்குப் போகிறார்கள். 

ஆனால், இதுவரை எந்த கடவுளும் யாருக்கும் எதுவும் செய்ததில்லை. நம்பிக்கை உடையவர்கள் அவர்களே ஆறுதல் அடைகிறார்கள். நம்பிக்கை இல்லாதவர்கள் விதி என்று வேதனைப்படுகிறார்கள்.

Leave a Comment