Publications

உங்கள் பிள்ளையும் ஜீனியஸ் ஆகலாம் – எஸ்.கே.முருகன்

எல்லா பிள்ளைகளும் இயற்கை வைரம் போன்றவர்கள். பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்களால் பட்டை தீட்டப்படும் அளவுக்கே அவர்கள் ஜொலிக்கிறார்கள். ஜீனியஸ் ஆகிறார்கள். இந்த உண்மை புரியாமல், ஒவ்வொரு பெற்றோரும், மற்ற பிள்ளையை விட தங்கள் பிள்ளை புத்திசாலியாக வளரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். நல்ல உணவு, மிகப்பெரிய பள்ளி, சிறப்பு வகுப்புகள், தனித்துவப் பயிற்சி, செல்போன் என்று சக்திக்கு மீறி பணத்தை செலவழிக்கிறார்கள். ஆனால், எதிர்பார்த்த ரிசல்ட் இல்லை என்றதும் வருந்துகிறார்கள். வருத்தம் கோபமாகிறது. கோபம் பிள்ளையுடன் மோதலை உருவாக்குகிறது. வீடு களேபரமாகிறது. பிள்ளை ஜீனியஸ் ஆகவேண்டும் என்பது நல்ல ஆசை. ஆனால், நான் நினைப்பது போன்று பிள்ளை ஜீனியஸாக வேண்டும் என்பது ஆபத்தான ஆசை. குழந்தை வளர்ப்பு என்பது பிள்ளைகளை நம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அல்ல. பிள்ளைகள் தங்களின் சொந்தக் காலில் நிற்கும் நம்பிக்கை கொடுப்பதுதான். அதற்கு சரியான உளவியல் வழிகளைக் காட்டுகிறது இந்த புத்தகம். அதோடு, டீன் வயதில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நிஜமான வாழ்க்கைக் கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்த கவுன்சிலிங் கதைகள் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு நிச்சயம் வழிகாட்டும். இது, ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய புத்தகம். ஒவ்வொரு பெற்றோருக்கும் பரிசளிக்க வேண்டிய புத்தகம்.

விலை : Rs. 300 + தபால் செலவு ரூ.60

உயிர்த்துணை – எஸ்.கே.முருகன்

உயர் அதிகாரியின் வசவுகளை பொறுத்துக் கொள்கிறார்கள். யாராவது வம்பிழுத்தால் ஒதுங்கிவிடுகிறார்கள். பொதுவெளியில் உதவுகிறார்கள், மன்னிப்பு கேட்கிறார்கள்.
ஊருக்கெல்லாம் நல்லவராக இருப்பவர்கள், வீட்டுக்குள் நுழைந்ததும் கணவன், மனைவியாக மாறிவிடுகிறார்கள். ஈகோவை வளர்த்துக்கொண்டு சண்டைக் கோழி போன்று சின்னச்சின்ன விஷயங்களுக்கும் எரிச்சலாகி நாள் முழுவதும் கோபத்துடன் பொழுதைக் கழிக்கிறார்கள்.
அலுவலகத்தில் நெளிவுசுளிவுகளுடன் விட்டுக்கொடுக்கும் மனிதர்களால், வீட்டுக்குள்ளும் மகிழ்ச்சியான தம்பதியாக வாழ முடியும். இதற்கான உளவியல் ரகசியங்களைக் கற்றுத்தருகிறது, ‘உயிர்த்துணை’, திருமண பந்தத்தில் நுழைபவர்களுக்கும், மல்லுக்கட்டும் தம்பதியருக்கும் பரிசளிக்க ஏற்ற புத்தகம்.

விலை : Rs. 225 + தபால் செலவு ரூ.60

நெருப்பூ – எஸ்.கே.முருகன்

அன்பாக இருந்து விஷமாக மாறிய இதிகாச நாயகி அம்பை.
அந்தப்புரத்தில் அடிமையாக மட்டுமே பெண் இருக்க முடியும் என்ற ஆண்களின் அதிகாரத்தை உடைத்தவள் அம்பை.
வித்தியாசமான நடையில், புதிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட புனைவுப் புதினம்.

370 பக்கம் : Rs. 250 + தபால் செலவு ரூ.60

இன்று முதல் ஹேப்பி – எஸ்.கே.முருகன்

நோய் அச்சம் தீர்க்கும் புத்தகம்
மனசு பாதி, மருந்து பாதி என்பார்கள். நோய் பாதிப்புகளில் இருந்து யாராலும் தப்பிக்க முடியாது. எனவே, நோய் வரும் நேரத்தில் மருந்து எடுத்துக்கொள்வதற்கு முன்பு நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது அவசியம். இதற்கு வழி காட்டுகிறார் மனவள ஆலோசகர் எஸ்.கே.முருகன்.
152 பக்கம் : விலை : Rs. 250 + தபால் செலவு ரூ.60

மாவீரர் செளந்திரபாண்டியனார் வாழ்க்கை சரிதம் – எஸ்.கே.முருகன்

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இரும்புத் தலைவர்
அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு சமூகத்திற்கு உரமும், ஊக்கமும் கொடுத்த செளந்திரபாண்டியனாரின் வாழ்க்கையின் சுருக்கமான புத்தகம். ஒரு தனி மனிதரின் வரலாறு மட்டுமின்றி ஒரு சமூகத்தின் சரித்திரமும் இவருக்குள் அடங்கியிருக்கிறது.
64 பக்கம் : விலை Rs. 100 + தபால் செலவு ரூ.60

தலையணை மந்திரம் – எஸ்.கே.முருகன்

ஆதர்ச தம்பதியராக வாழ்வதற்கான வழிகாட்டி
ஒரே ஒரு நபருடன் விட்டுக்கொடுத்து வாழ்க்கை நடத்த முடியாதவர்களால், இந்த உலகத்தில் வேறு எந்த ஒரு வெற்றியும் அத்தனை சுலபத்தில் அடைந்துவிட முடியாது. நல்ல தம்பதியருக்கான வழிகாட்டுதல்கள். திருமணம் முடித்தவர்களும், முடிக்கப் போகிறவர்களுக்கும் உதவக்கூடிய வழிகாட்டி.
154 பக்கம் : விலை : Rs. 200 + தபால் செலவு ரூ.60

உலகை உலுக்கிய 75 திரைப்படங்கள் – எம்.நிர்மல்

சினிமா பிரியர்களுக்கான புத்தகம்
சினிமா என்பது மூன்று மணி நேர சொர்க்கம். நாடு, இனம், மொழி, மதம், ஜாதி என அத்தனை எல்லைக்கோடுகளையும் கடந்து ஒட்டுமொத்த உலக மக்களையும் கவர்ந்த அட்டகாசமான 75 திரைப்படங்களைத் தேர்வு செய்து பார்க்கத் தூண்டியிருக்கிறார் ஆசிரியர். இந்தப் படங்களை எல்லாம் பார்க்காம விட்றாதீங்க.

440 பக்கம் – விலை ரூ.600 + தபால் செலவு ரூ.60

ஆத்மலோகம் – எஸ்.கே.முருகன்

மரணத்துடன் ஒரு கோர விளையாட்டு
துர்மரணம் அடைந்தவர்களின் ஆத்மா பூமியிலும் ஆத்மலோகத்திலும் சஞ்சரிக்கிறது. சிறுவனின் ஆவியை பணயக் கைதி போன்று வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஆக்கிரமிக்க முயலும் கொடூர ஆத்மாவின் கதை.
204 பக்கம் : விலை Rs. 250 + தபால் செலவு ரூ.60

80725 89355
செல்போன் எண்ணுக்கு பணம், முகவரி அனுப்புங்கள். புத்தகம் வீடு வந்து சேரும்

வங்கிக் கணக்கிலும் பணம் அனுப்பலாம்.
GYANAGURU PUBLICATION,
UNION BANK OF INDIA,
IFS CODE : UBIN0554847,
Current Account No. 548401010050639