நல்ல வார்த்தைகள் ஆயிரம் நண்பர்களுக்கு சமம்

வார்த்தைகளே வரம்

இனிமையான பேச்சு, நல்ல வாழ்க்கையை கற்றுத்தரும் மிகப் பெரிய ஆசிரியன். ஒரு நல்ல நண்பன் நம்மை சில நேரங்களில் மட்டுமே வழிநடத்துவான்; ஆனால் நல்ல வார்த்தைகள் பேசுபவர் வாழ்நாள் முழுவதும் வெளிச்சத்தில் நடப்பார்.

வார்த்தைகள் மரணமில்லாதவை. ஒரு மனிதன் இறக்கலாம், ஆனால் அவன் விதைத்த நம்பிக்கைச் சொல் காலம் கடந்து அடுத்த தலைமுறையை வாழ வைக்கும். தீய சொல், காலம் கடந்தும் விமர்சனத்தை உருவாக்கும்.

கூகுள் மேப்

நல்ல வார்த்தைகள் மனித ஆன்மாவின் கவசங்கள். காலம் எனும் பெருவெளியில் தொலைந்துபோகாமல் காப்பாற்றும் கூகுள் மேப். வாழ்க்கையின் எந்த ஒரு புள்ளியில் நாம் நின்றாலும், நம் கையைப் பிடித்து வழிநடத்த நல்ல சொற்கள் நிச்சயம் காத்திருக்கும்.

ஆகவே, நல்ல சொற்களை பேசுவோம், நல்ல சொற்களைக் கேடோம். ஒரு நாள் அனைத்தும் நம்மை விட்டுச் சென்றாலும், நாம் கேட்ட அந்த ஒரு நல்ல சொற்கள் நம்மை மீண்டும் உயிர்ப்பிக்கும். நம்பிக்கை தரும். மகிழ்ச்சி தரும்.

நல்ல வார்த்தைகள் மனிதர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. நாம் ஒருவரிடம் அன்பாக, மரியாதையாக பேசும்போது, அவர்களின் மனதில் நிம்மதி உருவாகிறது. ஒரு சிறிய பாராட்டு கூட அவர்களின் நம்பிக்கையை உயர்த்துகிறது.

வலுவாகும் உறவுகள்

நல்ல வார்த்தைகள் உறவுகளை வலுப்படுத்துகின்றன. குடும்பம், நண்பர்கள், வேலைப்பழக்கம் ஆகிய எல்லா இடங்களிலும் இனிமையான பேச்சு ஒற்றுமையை உருவாக்குகிறது. கடினமான சூழ்நிலைகளிலும் நல்ல வார்த்தைகள் பிரச்சினைகளை எளிதாக சமாளிக்க உதவுகின்றன. கோபத்தையும் தவறான புரிதல்களையும் குறைத்து, பரஸ்பர புரிதலை வளர்க்கின்றன.

மேலும், நல்ல வார்த்தைகள் பேசுபவருக்கே நன்மை தருகின்றன. இனிமையாக பேசும் மனிதர்கள் அனைவராலும் விரும்பப்படுவர். அவர்கள் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெறுவர். அவர்களுடன் மக்கள் எளிதில் பழக விரும்புவார்கள். இதனால் வாழ்க்கையில் முன்னேற்ற வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.

நல்லதை பேசுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment