வெற்றிக்கு ஆசைப்பட்டால், முதலில் உங்களை ஒரு வெற்றியாளராக நீங்கள் நம்பத் தொடங்குங்கள்

மந்திரச்சொல்

மனிதர்கள் அடையும் பல வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் அவர்களுடைய மனநிலையே முக்கிய காரணமாக இருக்கிறது.

என்னால் முடியாது, என்னால் முடியுமா என்றெல்லாம் நினைக்கும் மனம் முயற்சி செய்வதற்குத் தயங்கி நிற்கும்.  என்னால் நிச்சயம் முடியும் என்று நம்பும் மனம், அதற்கான வழிகளைத் தேடத் தொடங்கும்.

வெற்றி என்பது ஒரே நாளில் யாருக்கும் கிடைப்பதில்லை. அதிர்ஷ்டத்தின் மூலம் யாரும் வெற்றியாளராக மாறுவதில்லை. அது மனதில் பிறக்கும் நம்பிக்கையின் நீண்ட நாள் பலன்.

ஒரு விதை மரமாக மாறுவதற்குத் தயாராக இருக்க வேண்டும்.
அதுபோல மனிதரும் தன்னைத் தானே மதிக்கத் தொடங்கும்போது, வளர்ச்சி ஆரம்பமாகிறது.

உங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்களோ, அப்படித்தான் உலகமும் உங்களைப் பார்க்கத் தொடங்கும்.

தோல்வி வரும்போது சோர்வடையாதீர்கள். ஒரு நல்ல பாடம் கிடைத்துள்ளது என்று அடுத்த முயற்சிக்குத் தயாராகுங்கள். தோல்விக்கு அஞ்சாத மனநிலையே வெற்றியாளர்களை உருவாக்குகிறது.

வெற்றியாளர்கள் பிறப்பதில்லை, அவர்கள் உருவாகிறார்கள்.
அவர்களை உருவாக்குவது அவர்களுடைய தன்னம்பிக்கை, முயற்சி, மன உறுதி. எனவே முதலில் உங்களை வெற்றியாளராகப் பார்க்கத் தொடங்குங்கள்.
ஏனெனில், எல்லா வெற்றிகளும் முதலில் மனதில்தான் பிறக்கின்றன.

Leave a Comment