மந்திரச்சொல்.
வலியை உணர்ந்தால் ஒருவர் உயிருடன் இருப்பதாக அர்த்தம். அடுத்தவர் வலியை உணர்ந்தால் அவர் மனிதராக வாழ்வதாக அர்த்தம்.
மனித உடலில் ரத்தம், சதை மட்டுமல்ல, உணர்வுகளும் நிரம்பியிருக்கின்றன. உடல் காயங்களை மருந்துகள் குணப்படுத்தலாம். மனக்காயங்களை குணப்படுத்துவது அன்பும் மனிதநேயமும்தான்.
பணம், பதவி, புகழ் எல்லாம் ஒருவரை பெரியவராக்கலாம். பிறர் துயரத்தில் தோள் கொடுக்கும் குணம் அன்பான மனிதராக மதிப்பூட்டுகிறது.
பசியறிந்து உணவளிப்பது, மனம் உடைந்தவருக்கு ஆறுதல் கூறுவது, தவறு செய்தவரை மன்னிப்பது, விழுந்தவரை தூக்கி நிறுத்துவது எல்லாமே மனிதநேயத்தின் அடையாளங்கள்.
திறமையான மனிதராக இருப்பதைவிட, இரக்கம் கொண்ட மனிதராக இருப்பது நிம்மதி தருகிறது.
எப்போதும் பிறர் வலியை கேலி செய்யாதீர்கள், அதை புரிந்துகொள்ள முயலுங்கள்.
ஏனென்றால், மனிதரின் உயரம் அவர் சம்பாதித்த பணத்தில் இல்லை; பிறர் கண்ணீரை துடைத்த கரங்களில் இருக்கிறது.
