குடும்பப் பிரச்னை தீர்வதற்கு நல்ல வழி..?

ஞானகுரு பதில்கள்

ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.

கேள்வி : ஏட்டுக் கல்வி சிறந்ததா.. அனுபவக் கல்வி சிறந்ததா?

  • எம்.தேவகி, காரைக்கால்

ஞானகுரு :

இந்த உலகின் டாப் 10 பணக்காரர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், விஞ்னானிகள் எவருமே பாடம் படித்து முன்னுக்கு வந்தவர்கள் அல்ல. ஆனால் அவர்களிடம் பணியாற்றுவதற்கு ஏட்டுக் கல்வி முடித்தவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.

கேள்வி : வயதானவர்களிடம் குடும்பப் பிரச்னைக்குத் தீர்வு கேட்கலாமா..?

  • சி.மஞ்சுளா, திருப்பூர்

ஞானகுரு :

திருமணத்திற்குப் பிறகு ஆண், எதையுமே பிரச்னையாக கருதுவதில்லை. திருமணத்திற்குப் பிறகு எல்லாவற்றையும் பிரச்னையாகப் பார்ப்பவள் பெண். இந்த இருவரும் சேர்ந்து வாழத்தான் விதிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நபர் மூலம் தீர்வு கிடைக்கட்டும் என்று எவர் நினைத்தாலும் பிரச்னை வீதிக்கு வந்துவிடும்.

கணவரும் மனைவியும் மட்டுமே பேசித் தீர்க்க வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட நிபுணர்களை அணுக வேண்டும். வயதானவர்கள், அனுபவஸ்தர்கள் என்று உறவினர்களை நம்பினால் வேதனையே வரும். வயதுக்கும் தெளிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

கேள்வி  : உண்மை சுடும் என்கிறார்களே… உண்மையா?

  • டி.கிருஷ்ணகுமார், கிருஷ்ணகிரி

ஞானகுரு :

பொய்யர்களுக்கு மட்டும்தான் உண்மை சுடும். நேர்மை, நியாயத்துக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்கள், பொய் என்றால் உள்ளம் நடுங்குவார்கள். ஆனால், பொய்யாக வாழ்ந்து பழகியவர்களுக்கு உண்மை மீது எந்த மதிப்பும், மரியாதையும் இருப்பதில்லை.  சிக்காத வரை பொய் மகிழ்ச்சிதரும். சிக்கிய பிறகு உண்மை சுட்டுவிடும்.

Leave a Comment