ஆசிரியர் பக்கம்
நடுத்தர வர்க்கத்தினர் பிராண்டிங் போதையில் சிக்கிக்கொண்டு தடுமாறுகிறார்கள் ஐ போன், அவெஞ்சர் பைக் என காஸ்ட்லி பொருட்கள் வைத்திருப்பதை மரியாதை என்று நினைக்கிறார்கள். இணையம், நட்பு வட்டம், விளம்பரங்கள் போன்றவை அவர்களிடம் இந்த எண்ணத்தை வலுவூட்டுகின்றன.
இலக்கு ஒன்றுதான்
5 லட்சம் ரூபாய் கடிகாரமும் 300 ரூபாய் கடிகாரமும் ஒரே நேரத்தையே காட்டுகிறது. முதல் வகுப்பில் பயணித்தாலும் முன்பதிவு இல்லாமல் பயணித்தாலும் ரயில் ஒரே இடத்திற்கே போகிறது. எனவே, விலையை விட பயன்பாடுதான் முக்கியம்.

இன்னொரு வகையில் சொல்வது என்றால் தேவைக்கும் ஆசைக்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். உணவு, உடை, வீடு, கல்வி, சுகாதாரம் போன்றவைகளுக்கு செலவு செய்ய வேண்டியது கட்டாயம், இது தேவை. அதேநேரம், ஹோட்டல் சாப்பாடு, பிராண்டட் ஆடைகள், லக்ஷரி செல்போன் என்பதெல்லாம் ஆடம்பரம். அதாவது ஆசை.
ஒரே ஒரு கேள்வி
எந்த ஒரு பொருள் வாங்கும்போதும் ஒரு கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். அதாவது, இந்த பொருள் என் தேவைக்கா அல்லது பிறரை கவர்வதற்காக என்று கேட்டுப் பாருங்கள். பிறருக்காக என்றால் அது தற்காலிக மகிழ்ச்சி மட்டும் தரும். உங்களுக்கு என்றால் நீண்ட கால நன்மை தரும்.
உண்மையான லைஃப் ஸ்டைல் என்பது ஒருவர் எதை பயன்படுத்துகிறார் என்பதில் இல்லை. எத்தனை சுதந்திரமாக, இயல்பாக, மன அழுத்தமின்றி இருக்கிறார் என்பதில்தான் இருக்கிறது.
எந்த ஒரு பிராண்டும் மனிதரின் மதிப்பை நிர்ணயிப்பதில்லை, உங்களுக்கு நீங்களே பிராண்ட் ஆக இருங்கள். பிறர் கவனத்தை ஈர்ப்பதற்கு பிராண்டிங் பொருட்கள் தேவையில்லை. எனவே, பிராண்டிங் போதையில் மாட்டிக்கொள்ளாமல் புத்திசாலித்தனமாக செலவு செய்யுங்கள். அதுவே, மகிழ்ச்சி.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.
