உதவிக்கு வந்த சோதனை
கல்வி ஒரு மனிதனின் வாழ்க்கையில் எத்தனை தூரம் முக்கியமானது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அதனால்தான், கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்று நம் முன்னோர்கள் பாடி வைத்திருக்கிறார்கள்.
இந்தக் காலத்திலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் மேற்படிப்பு படிப்பதற்கு பொருளாதார சுமையை நினைத்து பலரும் தயங்குகிறார்கள். இதற்கு அவசியமே இல்லை.
ஆம், இப்போது அனைத்து மாணாக்கர்களும் கல்விக்கடன் பெற்று படித்துவிட முடியும். கல்விக் கடன் பெறுவதற்கு அனைத்து மாணவர்களுக்கும் உரிமை இருக்கிறது. அதனால் இப்போதே கல்விக் கடன் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள். கடன் வாங்குவதற்கு அடையாளச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்று இந்த மூன்றும்தான் முக்கியம்.
படிப்பதற்கு எங்கே இடம் கிடைக்கிறது என்பதை பார்த்துவிட்டு கடன் பற்றி முடிவு செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்காமல், இப்போதே அருகில் உள்ள வங்கிக் கிளையினை அணுகி கல்விக் கடன் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் தேவையான ஆவணங்களைக் கொடுத்து எளிதில் கடன் பெறமுடியும்.
கல்விக்கடன் வாங்கினால் அரசு தள்ளுபடி செய்துவிடும் என்று நம்பி நிறைய பேர் காத்திருக்கிறார். இது சரியான எண்ணம் அல்ல. கடன் வாங்கினால் கட்ட வேண்டும் என்பதுதான் சரியான செயல். கல்விக் கனவு காண்பவர்கள் கடன் வாங்கிப் படித்து, வெற்றி பெறலாம்.
