அதிகம் செலவு செய்தது திமுகவா… அதிமுகவா…?

என்ன செய்தார் சைதை துரைசாமி – 463

பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமி காலத்தில் மன்ற உறுப்பினர்களின் உணவுக்கு 61.53 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள் என்று திமுகவின் முரசொலி பத்திரிகை ஒரு பொய் செய்தி வெளியிட்டது. இதற்கு சென்னை மாமன்றக் கூட்டத்திலே மிகச்சிறப்பாகப் பதிலடி கொடுத்தார் மேயர் சைதை துரைசாமி என்று பார்த்தோம்.

அந்த வகையில் மேயர் சைதை துரைசாமி, ‘’நான், மேயராயாகப் பதவி ஏற்றது தொடங்கி மே 2015-ம் ஆண்டு வரையான 44 மாதங்களில் 43 கூட்டங்கள் நடத்தப்பட்டு  61.53  லட்சம் ரூபாய் உணவுக்கு செலவழிக்கப்பட்டுள்ளதாக முரசொலி செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆனால், கடந்த திமுக ஆட்சியில் 44 மாதங்களில் 43 கூட்டங்களில் திமுக 62 லட்சத்து 26 ஆயிரத்து 555 ரூபாய் செலவழித்துள்ளது.

அன்றைய காலகட்டத்தில் சென்னை மாநகராட்சியில் இருந்த வார்டுகளின் எண்ணிக்கையும், மாமன்ற  உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 155 தான். ஆனால்,  இன்றைக்கு சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்து 200 வார்டுகளையும், 200 மாமன்ற உறுப்பினர்களையும் பெற்றுள்ளோம். மேலும், அன்றைக்கு இருந்த  விலைவாசியையும், இன்றைய விலைவாசியையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

மாமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 155 ஆக  இருந்தபோது திராவிட முன்னேற்றக் கழகம் செய்த செலவு ரூ.62.26 லட்சம். ஆனால், 200 உறுப்பினர்களுக்கு 61.55 லட்ச ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதில் இருந்தே யார் அதிகம் செலவழித்தது என்பதை அறியமுடியும்…’’ என்று பக்காவாக சூடு போட்டார். அதோடு நிறுத்திக்கொள்ளவில்லை மேயர் சைதை துரைசாமி.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment