ஞானகுரு பதில்கள்
கேள்வி : கணவனை மனைவி எப்போது முழுமையாகப் புரிந்துகொள்வார்?
- டி.கணேஷ்குமார், சூலக்கரை.
ஞானகுரு :
ஆணைவிட பெண்ணுக்குப் புத்திசாலித்தனம் அதிகம் என்பதால் திருமணமானதும் கணவரின் நடவடிக்கைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்வார். ஆனால் புரிந்துகொண்டதாக காட்டிக்கொள்ள மாட்டார்.
இதற்கு நேர் எதிர் ஆண்கள். மனைவியை புரிந்துகொள்வதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் புரிந்துகொள்ள முயற்சி கூட செய்ய மாட்டார்கள். ஆனால் மனைவி பற்றி முழுமையாகத் தெரியும் என்று நம்புவார்கள்.
உண்மை என்னவென்றால், யாராலும் தன்னையே முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. எனவே, அடுத்தவரைப் பற்றி அறிந்துகொள்ள முயற்சி செய்வது வீண். சிக்கலான தருணங்களில் யார் எப்படி முடிவெடுப்பார்கள் என்று கணிக்கவே முடியாது.
எனவே, ஒருவரையொருவர் மதித்து, விட்டுக் கொடுப்பதில் வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
