நல்ல பேச்சாளராக என்ன தகுதிகள் வேண்டும்..?

ஞானகுரு பதில்கள்

ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.

கேள்வி : உடலுக்கும் மனதுக்கும் சம்பந்தம் உண்டா?

  • எஸ்.சிவகாமி, சூலக்கரை மேடு.

ஞானகுரு :

உடல் என்ற பருப்பொருளை மனம் ஆட்டிவைக்கிறது உருவம் இல்லாத மனம். தலை வலிக்கு மாத்திரை போடலாம் அல்லது தானே சரியாகிவிடும் என்று முடிவெடுப்பது முதல் தற்கொலைக்கு உடலைத் தூண்டும் வரை மனமே செயல்படுகிறது. ஆனால் உடலால் மனதை இயக்க முடியாது.

அதனால் உடல் நலத்திற்கு ஆசைப்படுபவர்கள் முதலில் மனதை வசப்படுத்த வேண்டும். உடல் நலமாக இருந்தால் மட்டுமே மனம் திடமாக இருக்கும். இந்த இரண்டும் ஆரோக்கியமாக இருந்தாலே நல்ல சிந்தனைகள் வளரும். வாழ்க்கை வெற்றியை நோக்கி நகரும்.

……………………..

கேள்வி : மேடைப் பேச்சாளராக என்ன செய்ய வேண்டும்?

  • பி.சகுந்தலா, வத்றாப்.

ஞானகுரு :

பிறரை சிரிக்க வைக்கும் அளவுக்கு நகைச்சுவையாகப் பேசத் தெரிவதே நல்ல தகுதி. அடுத்தது, நல்ல ஞாபகசக்தி வேண்டும். 10 சங்ககாலப் பாடல்களை மளமளவென மேடையில் ஒப்பித்தாலே போதும், அர்த்தமே புரியவில்லை என்றாலும் வலிக்கவலிக்க கை தட்டுவார்கள்.

நிறைய பேச்சாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேளுங்கள். உங்களுக்கு என்று ஒரு பாணியை உருவாக்குங்கள். முதலில் நண்பர்கள், குடும்பத்தினரை பேச்சினால் மயக்குங்கள். இதில் வெற்றி பெற்றால், மேடை ஏறலாம்.

Leave a Comment