மனிதருக்கு நிஜமான சொத்து.எது?

உயிர்களின் வாக்குமூலம்

ஆரோக்கியம், பணம், பதவி, செல்வாக்கு, உறவு, புகழ் போன்றவைகளையே முக்கியமான சொத்தாக மனிதர்கள் நினைக்கிறார்கள். உண்மை என்னவென்றால், இவை எல்லாவற்றையும் விட உடல் மட்டுமே முக்கியமான சொத்து. இந்த உண்மையை பிற உயிர்களிடமிருந்து மனிதர்கள் கற்றுக் கொள்ளலாம்.

விலங்குகள், பறவைகள், மீன்கள் என அத்தனை உயிர்களும் தங்கள் உடம்பை மட்டுமே நேசிக்கின்றன. உயிர் வாழ்வதற்காக கடைசி வரையிலும் போராடுகின்றன. எந்த உயிர்களும் தற்கொலை செய்வதில்லை. உடல் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால்தான் மனதால் சிந்திக்கவும் செயல்படவும் முடியும். வயிற்றில் பசி இருக்கும்போது, வேறு எந்த சிந்தனையும் மனிதருக்குத் தோன்றாது. எனவே மனதை விட உடம்பே முக்கியம்.

மனம் சுத்தமாக இருந்தால் போதும், உடம்பு பற்றிய கவலை வேண்டாம் என்று சிலர் சொல்வதை நம்பாதீர்கள். ஏனென்றால் மனிதரின் மனசு எப்போதும் சுத்தமாக இருக்கவே செய்யாது.  

அழகான ஒருவரைப் பார்த்தாலே ஆசை வரும், பிறர் வைத்திருக்கும் பொருளைப் பார்த்து பொறாமை வரும், தன்னை ஏமாற்றியவரை பழி வாங்கும் எண்ணம் வரும். இப்படிப்பட்ட கெட்ட எண்ணங்கள் கொண்ட மனதை அடக்குவதற்கு ஆரோக்கியமான உடல் தேவை. ஆகவே, உடல் மட்டுமே மனிதர் காப்பாற்ற வேண்டிய முக்கியமான சொத்து என்பதைப் புரிந்துகொண்டு மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.  

Leave a Comment