ஞானகுரு பதில்கள்
கேள்வி : நான் காதலித்த பெண் என்னை நிராகரித்து விலகிவிட்டார். இந்த தோல்விக்குப் பிறகு நான் உயிர் வாழ வேண்டுமா?
- எல்.மணிமாறன், பொள்ளாச்சி.
ஞானகுரு :
சதுரங்க விளையாட்டில் ராணி வெட்டப்பட்டதும் ஆட்டம் முடிவதில்லை. ஒரு சாதாரண சிப்பாயை மேலே கொண்டுவந்து, வேறு ஒரு ராணியை உருவாக்க முடியும். இது வாழ்க்கைக்கும் பொருந்தும். உங்களை பெற்றோர், உடன் பிறந்தோர், நண்பர்கள் யாரும் கைவிடவில்லை. எனவே, விரும்பாத பெண்ணுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்வது முட்டாள்தனம்.
அதேநேரம், உங்களை விரும்பிய பெண் விலகுகிறார் என்றால் கண்டிப்பாக அதற்கு காரணம் இருக்கும். உங்களிடம் என்ன தவறு என்பதைக் கண்டுபிடித்து தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்து வரும் பெண் உங்களை பொக்கிஷமாகப் பாதுகாக்கும் அளவுக்கு சிறப்பாக வாழ்ந்து காட்டுங்கள். இதுவே, உங்கள் முதல் காதலிக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய காதல் பரிசு. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
