மனிதர்களின் பிரச்னைகளுக்குக் காரணம் என்ன..?

ஞானகுரு பதில்கள்

ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.

கேள்வி : உண்மை, நேர்மை, உழைப்பு, ஒழுக்கம் இவற்றுக்கு இந்த காலத்தில் உரிய மதிப்பும் அங்கீகாரமும் கிடைக்கவில்லையே..?

  • கோ.அரங்கநாதன், சென்னை.

ஞானகுரு :

பிறரிடம் இருந்து மதிப்பும் மரியாதையும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் நேர்மையாக இருப்பது உண்மையான குணமாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. நேர்மையும் உண்மையும் உங்களுக்கு மனப்பூர்வமாக ஆனந்தம் தருகிறது என்றால் மட்டும் இந்த வழியில் செல்லுங்கள்.

மற்றபடி நேர்மையாக இருப்பவரைப் பாராட்டி, வானத்தில் இருந்து தேவர்கள் பூமழை பொழிவார்கள், மக்களிடையே மிகப்பெரிய மரியாதை கிடைக்கும் என்றெல்லாம் எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள். யாரும் உங்களை நேர்மையாக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. எனவே, நல்லவராக இருப்பதும் கெட்டவராக இருப்பதும், அவரவர் விருப்பம்.  

……………………….

கேள்வி : மனிதர்களின் பிரச்னைகளுக்குக் காரணம் ஆசையா… அலட்சியமா?

  • கே.சிந்தாமணி, கள்ளக்குறிச்சி.

ஞானகுரு :

ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று புத்தன் கூறியது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதன் அர்த்தத்தை அறிந்துகொள்ள எல்லோரும் தவறிவிட்டனர். அந்த சிம்பிள் அறிவுரையை  அலட்சியம் செய்ததுதான், அத்தனை பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணம்.

Leave a Comment