மறுபிறவி எப்படி இருக்கும்?

மூன்று பதில்கள்

இந்த உலகில் உள்ள எல்லா மதங்களும் மறுபிறவிக்கு உறுதி அளிக்கின்றன. அதனால் கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் மறுபிறவியை உறுதியாக நம்புகிறார்கள். மரணத்திற்குப் பிறகு ஒன்றுமே இல்லை என்று நாத்திகர்கள் மறுக்கிறார்கள். அதேநேரம், அறிவியல் அறிஞர்கள் மறுபிறவி பற்றி என்ன சொல்கிறார்கள் தெரியுமா..?

மறுபிறவிக்கு வாய்ப்பு இருக்கலாம் என்று கொஞ்சம் நம்பிக்கை கொடுக்கிறார்கள். ஏன் இப்படி சொல்கிறார்கள் தெரியுமா..?

அறிவியல் எதையும் முழுமையாக மறுப்பதில்லை. மேலே போட்ட பந்து கீழே விழும் என்பது அறிவியல் விதி. அதேநேரம் புவியீர்ப்பு இல்லாத இடங்களில் மேலே வீசிய பந்து கீழே விழாமல் போவதற்கு வாய்ப்பு உண்டு. வேறு வகையிலும் உதாரணம் சொல்லலாம்.

அதாவது தாயின் வயிற்றுக்குள் இருக்கும் சிசுவுக்கு தொப்புள் வழியே உணவு கிடைக்கிறது. பாதுகாப்பாக, நிம்மதியாக வயிற்றுக்குள் வாழ முடிகிறது. தாயின் வயிற்றுக்கு வெளியே வேறு ஒரு புதிய வாழ்க்கை காத்திருப்பதை அந்த சிசுவால் கற்பனை செய்தே பார்க்க முடியாது. ஆனால், பிரசவத்திற்குப் பிறகு அந்த குழந்தை வித்தியாசமான புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறது என்பது உண்மை.

கருவில் இருக்கும் சிசுவால் கற்பனை செய்ய முடியாத ஒரு வாழ்வு, பிரசவத்திற்குப் பிறகு உண்மையாவது போன்று, மரணத்திற்குப் பிறகு மனிதரால் கற்பனை செய்ய முடியாத ஒரு வாழ்க்கை இருக்கலாம். அது மறுபிறவியாக இருக்கவும் வாய்ப்பு உண்டு என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

அப்படி என்றால் எது உண்மை..? நீங்கள் ஆத்திகரா, நாத்திகரா அல்லது அறிவியல் ஆர்வலரா என்பதைப் பொறுத்து அந்த உண்மை மாறுபடும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment