சிரிப்போ சிரிப்பு
சிரிப்பு என்பது கவலை, துன்பத்தை மறக்கவைக்கும் அற்புத மருந்து. கடவுள் என்றாலும் உயிர் என்றாலும் நகைச்சுவைதான். சாம்பிளுக்கு ரெண்டு.
குடிகார கடவுள்
கடவுள் ஒரு நாள் நம்ம தமிழ்நாட்டை சுத்தி வந்தாராம். ஒரு டாஸ்மாக் கடையைப் பார்த்ததும், ஏன் இவ்வளவு கூட்டம்னு உள்ளே நுழைஞ்சார். எல்லோரும் வாங்கிக் குடிக்கிற மாதிரி இவரும் சரக்கை வாங்கிக் குடிச்சார். ஆனாலும் போதை ஏறலை. எல்லா வகையிலான சரக்கும் வாங்கிக் குடிச்சார். ஆனாலும் போதை ஏறவில்லை. கடைக்காரனுக்கு ஆச்சயர்யமாயிடுச்சு. ‘எப்படிங்க இவ்வளவு குடிச்சும் போதை உங்களுக்கு ஏறலை’னு கேட்டார்.
உடனே அவர், ‘நான் கடவுள். இந்தப் போதை என்னை ஒண்ணும் செய்யாது’னு சொன்னாராம்.
உடனே கடைக்காரர், ‘அட… போதை ஏறிடுச்சா’னு கேட்டு சிரிச்சிக்கிட்டே போனாராம். கடவுள் நேரே வந்தாலும் இதுதாங்க நிலைமை.
போடோவுக்கு சிரிங்க
காட்டுக்குள் மின்னல் தாக்கி இறந்துபோயிருந்த ஒருவனை போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காகக் கொண்டுவந்தார்கள். அவன் சிரித்த நிலையிலே உயிர் விட்டிருந்தான். டாக்டருக்கு ஆச்சர்யம். உடல் எல்லாம் தீ பிடித்தது போல் கருகி இருந்தது… ஆனால் உதட்டில் மட்டும் சிரிப்பு அதிகமாக இருந்தது. எப்படி என்று நினைத்துப் பார்த்து அவரால் விடை காண முடியவில்லை. அவன் மரணத்தைப் பார்த்தவர்களை அழைத்து விசாரித்தார்.
‘யாரோ போட்டோ பிடிக்கிறாங்க… பிளாஷ் லைட் விழுதுன்னு நினைச்சு சிரிச்சிக்கிட்டு இருந்தான் டாக்டர்’ என்றார்களாம் உடன் இருந்தவர்கள்.
வாய் விட்டு சிரித்தீர்களா… நன்றாக சிரியுங்கள். அதைப் போன்ற சிறந்த மருந்து உலகத்தில் வேறு எதுவும் இல்லை.
