நல்ல மாமியார் என்ன செய்வார்..?

உறவுக்கு ஐந்து விதிகள்

இந்த உலகத்திலே அதிக சிக்கலான உறவு என்றால் அது மாமியார், மருமகள் உறவு தான். உண்மையில் நல்ல மாமியாராக இருப்பது எளிதான விஷயம் தான். அதற்கு கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஐந்து விதிகளை அறிந்துகொள்ளுங்கள்.

  • மருமகள் மீது மாமியாருக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே மருமகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பதற்கு அவசியம் இல்லை.
  • தங்கள் குடும்ப உணவு முறை, தங்கள் வீட்டுப் பழக்கம் போன்றவைகளை மருமகள் மீது திணிக்கக்கூடாது.
  • மருமகள் வாங்கும் சம்பளத்தில் கணக்குக் கேட்கக் கூடாது. வேலைக்குப் போகாத மருமகள் என்றால் செலவு பணத்திற்கு கணக்கு கேட்கக் கூடாது.
  • பேரக் குழந்தைகள் மீதும் மருமகளுக்கே முழு உரிமை உள்ளது. எனவே, அவரது பிள்ளை வளர்ப்பை குறை கூறக்கூடாது.  
  • கணவன், மனைவிக்குள் சண்டை வரும்போது மகனுக்கு ஆதரவாக நிற்கக்கூடாது.

இந்த ஐந்து விஷயங்களையும் கடைப்பிடித்துப் பாருங்கள். நல்ல மாமியார் என்று மருமகளே கொண்டாடுவார்.

Leave a Comment