பணம் என்னவெல்லாம் செய்யும்?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : பணம் பத்தும் செய்யும் என்கிறார்களே, அது என்ன..?

  • கே.ராகவன், சூலக்கரை.

ஞானகுரு ;

காம, குரோத, லோப, மோஹ, மத, மாச்சர்ய, டம்ப, தர்ப்ப, ஈர்ஷை, அசூயை ஆகிய பத்தும் செய்யும் என்பார்கள். அதாவது பேராசை, தீய இச்சை, கஞ்சத்தனம், காதல், அகம்பாவம் எனப்படும் ஈகோ, பொறாமை, ஆடம்பரம், தனக்கு நிகர் எவரும் இல்லை என்ற அகங்காரம், கர்வம், கெடுமனம் எனப்படும் கொடிய புத்தி போன்ற பத்து தீய குணங்களும் வந்து விடும் என்கிறார்கள்.

உண்மை என்னவென்றால் பணம் எதுவும் செய்யாது. பணம் என்பது கத்தி போன்றது. ஆபரேஷனும் செய்து உயிரைக் காப்பாற்றலாம், கொலையும் செய்யலாம். பணத்திற்காக தவறு செய்பவர்களை விட, பணம் இருப்பதால் தவறு செய்பவர்களே அதிகம். பணத்தை ஆயுதமாக நல்ல விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள்.

மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment