கவலையை மறக்க புறாவைப் பாருங்கள்.

மகிழ்ச்சியாக வாழும் கலை

கவலை இல்லாத மனிதர்கள் இந்த உலகில் யாருமே இல்லை. ஆனால், ஒவ்வொரு நபரும் தாங்கள் மட்டுமே அதிக துன்பத்தை அனுபவிப்பதாக நினைத்து கவலைப்படுகிறார்கள்.

தோல்வி, நஷ்டம், நெருங்கியவரின் மரணம் போன்ற முடிந்து போன விஷயங்களுக்கே நிறைய பேர் கவலைப்படுகிறார்கள். இனி, மாற்ற முடியாத விஷயங்களுக்கு வருத்தப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை புறாவிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.

புறா கூடு கட்டி முட்டைகளை அடை காக்கும். ஏதேனும் காரணங்களால் கூடும் முட்டைகளும் சேதம் அடைவதுண்டு. அப்படிப்பட்ட தருணங்களில் அங்கு வரும் புறா சுற்றிச் சுற்றிப் பார்த்து பெரும் ஏமாற்றம் அடையும். கொஞ்சநேரம் அமைதியாக நிற்கும். அவ்வளவுதான். அதன் பிறகு சட்டென இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். ஏனென்றால், இனி தன்னால் செய்யக்கூடியது வேறு எதுவும் இல்லை என்பது புறாவுக்குத் தெரியும்.

ஆனால், மனிதர்கள் மட்டும் தான் முடிந்துபோன துன்பத்தை பிடித்துவைத்து வருந்திக்கொண்டே இருக்கிறார்கள். நடந்து முடிந்தவை எல்லாமே மாற்ற முடியாதவை. ஆகவே, அந்த சுமையை மனதிலிருந்து இறக்கிவிட்டு, நிகழ் காலத்திற்கு வாருங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment