மனுநீதிச் சோழன் தீர்ப்பு சரியா..?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : மனுநீதிச் சோழன் போன்று இப்போது வாழ முடியுமா?

  • பி.ரத்தினம்மாள், சிவகாசி.

ஞானகுரு :

மனுநீதிச் சோழன் ஒரு முட்டாள் அரசன். தெரியாமல் செய்வது தவறு, தெரிந்து செய்வது தப்பு. இதுகூட அவனுக்குத் தெரியவில்லை. சோழனின் மகன் சிறுவன், அறியாமல்தான் தேர்க்காலில் கன்றை ஏற்றிக் கொன்றான். அறியாமல் தவறு செய்த சிறுவனுக்கு மரண தண்டனை கொடுப்பது முட்டாள்தனம்.

நீதிமான் என்று தன்னை மக்கள் புகழ்ந்து பேசவேண்டும் என்பதற்காக ஒரு சிறுவனைக் கொலை செய்த குதர்க்கவாதி அந்த மனுநீதிச் சோழன். அரசர் செய்தது முட்டாள்தனம் என்றால், அதை இன்று வரையிலும் மனிதர்கள் பாராட்டுவது அதைவிட முட்டாள்தனம்.  

கேள்வி : மகிழ்ச்சி வரும்போது அனைவரையும் மறந்துவிடுகிறார்களே, ஏன்?

  • சி.சுந்தரராஜன், கோவில்பட்டி.

ஞானகுரு :

மகிழ்ச்சிக்குக் காரணம் தான் மட்டும்தான் என்ற எண்ணம் தோன்றிவிடுகிறது. தன்னுடைய உழைப்பால், தன்னுடைய முயற்சியால் மகிழ்ச்சி உண்டானதாக நினைக்கிறார்கள். அதனால் அந்த மகிழ்ச்சியில் பங்குபோட எவரையும் அழைப்பதில்லை. அதேநேரம், துன்பம் நேர்ந்துவிட்டால், அது பிறரால் வருவதாக நினைக்கிறார்கள், அதனாலே, அதை எல்லோருக்கும் சொல்கிறார்கள்.

Leave a Comment