ஹேப்பி டிப்ஸ்
மிகப்பெரிய பங்களா, ஆடம்பர கார், நட்சத்திர ஹோட்டல் விருந்து, செல்வாக்கு போன்றவைகளை தரமான மகிழ்ச்சியான வாழ்க்கை என்று நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், உண்மையிலே தரமான வாழ்க்கைக்கு இலக்கணம் என்ன தெரியுமா..?
- பயமும், பதட்டமும் இல்லாத வருமானம்
- பிடித்த உணவுகள் சாப்பிடும் உடல் நலம்
- விரும்பிய இடத்துக்குப் பயணம்
- கைக்கெட்டும் வகையில் மருத்துவம்
- தொல்லை தராத பிள்ளைகள்
- கடமையைப் பகிர்ந்துகொள்ளும் துணை
- உரிமை எடுத்துக்கொள்ளாத உறவுகள்
இந்த ஏழும் ஒருவருக்குக் கிடைத்துவிட்டால் அவர் இந்த பூமியிலே சொர்க்கத்தைக் காண முடியும். இதை நோக்கிப் பயணியுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
