உலகின் முதல் பெண்கள் படை

இந்தியாவின் பெருமை

இந்த உலகில் போரில் ஈடுபடாத நாடு என்று எதுவுமே கிடையாது.  ஆண்களைப் போன்றே பெண்களும் பல நாடுகளிலும் போருக்குப் போயிருக்கிறார்கள். வீராவேசமாக போரிட்டு தங்கள் பலத்தை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் உலகிலேயே முதன்முறையாக பெண்களுக்கு என்று தனியாக ஒரு படைப்பிரிவு அமைத்த நாடு எதுவென தெரியுமா?

பெண்களை தெய்வமாகப் போற்றும் நம் இந்திய நாட்டில்தான் பெண்களுக்கென தனிப் படை அமைக்கப்பட்டது. அதனை தோற்றுவித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

ஆம், 1943ஆம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் என்ற இயக்கத்தில்தான் பெண்கள் மட்டுமே பங்கெடுத்த, ‘ஜான்சி ராணி படை’ அமைக்கப்பட்டது. இந்தப் படையில் சுமார் 1,500 பெண்கள் இணைந்தார்கள்.

18 வயது முதல் 28 வயதுள்ள பெண்களே இப்படையில் இணைய முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனாலும் 12 வயதில் இருந்து 45 வயது வரையிலுமான பெண்கள், தங்கள் உண்மையான வயதை மறைத்து  இந்தப் படையில் சேர்ந்தார்கள். இந்தப் படையில் நம் தமிழகத்தைச் சேர்ந்த பெண்களும் இடம் பிடித்தார்கள் என்பது நாம் பெருமைப்படக்கூடிய வரலாறு.


Leave a Comment