மேயரின் 207 சாதனைத் திட்டங்கள்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 470

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு மேயர் சைதை துரைசாமியின் காலத்தைப் பொற்காலம் என்றே சொல்ல முடியும். எந்த ஒரு மேயரும் இத்தனை திட்டங்கள் கொண்டுவந்தது இல்லை என்பது போன்று 207 திட்டங்கள் கொடுத்து சாதனை படைத்தார் மேயர் சைதை துரைசாமி. அடுத்த 57 சாதனைத் திட்டங்கள் இங்கே…

151 காமராஜர் சாலை அகில இந்திய வானொலி நிலையம் முதல் தலைமைச் செயலகம் வரை இருந்த 150 ஆண்டுகளுக்கு மேலான கருங்கல் மற்றும் வார்ப்பு இரும்பினால் ஆன புராதன மதில்சுவர் காலப்போக்கில் சிதிலமடைந்துவிட்டது அதனால் தற்போது துருப்பிடிக்காத இரும்புக் குழாய் மற்றும் கிரனைட் சிறு தூண்கள் அமைத்து நடைபாதை  சீரமைக்கும் பணிகள் செய்யப்பட்டுள்ளன.   

152. மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்துக் கொள்கை, சென்னை மாநகராட்சியில் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சிக்கு சர்வதேச மற்றும் தேசிய அளவில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

153. மூன்று ஆயுஷ் மருந்தகங்கள் – 5 வகையான இந்திய மருத்துவச் சேவைகள் ஒரே குடையின் கீழ் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.   

154. நீர்வழிப்பாதைகளின் வண்ண வரைபடம், தயாரித்து, மண்டலங்களில் தனிக்குழு அமைத்து தீவிர கொசு ஒழிப்புப் பணி நடைபெற்று வருகிறது.   

155. பகுப்பாய்வுக்கூடங்களில் ஸ்கேன், இசிஜி, ரத்தப் பரிசோதனை இலவசமாக்கப்பட்டிருக்கிறது.  

156. தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் செவிலியர் மருத்துவச்சி பயிற்சி மற்றும் சுகாதார ஆய்வாளர் பயிற்சி தொடங்க நடவடிக்கை.

157. எட்டு வகையான சிறப்பு காப்பகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.    

158. அரசு மருத்துவமனைகளில் 12 காப்பகங்கள் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன.

159. சென்சார் பேவர் இயந்திரம் மூலம் சாலைகளின் மேற்பரப்புச் சீராகவும், வாகன போக்குவரத்திற்கு இலகுவாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது.     

160. சாலையின் தரம் ஐந்து அடுக்குகளாக பரிசோதனை செய்யப்படுகிறது. 

161. இந்திய சாலைகள் ஆணையத்தின் விவரக் குறிப்பு அளவுகளின்படி 2643 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

162. விபத்தைத் தடுக்கும் வகையில் மத்திய தடுப்பான்கள், வண்டிகள் தடம் மாறாமல் செல்லும் வகையில் வழித்தட குறியீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.    

163. அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய ஜீப்ரா கிராசிங்குகள் போடப்பட்டுள்ளன.

164. நடைபாதைகளில் வாகனங்கள் நிறுத்துவதைத் தவிர்க்கும் பொருட்டு கிரானைட் தடுப்பான்கள் அமைக்கப்படுகின்றன.

165. நடைபாதைகளில் சேவை நிறுவனங்களின் வடங்கள் செல்வதற்கு ஏற்ப தனியாகக் குழாய்கள், கான்கிரீட் பெட்டகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.    

166. சிறப்பான நடைபாதைகள், பாதசாரிகள் பாதுகாப்புக்காக தேசிய அளவிலான விருதுகள் மற்றும் ஒரு சர்வதேச விருது பெறப்பட்டுள்ளன. 

167. பேருந்து வழித்தடங்கள் அனைத்திலும் நவீன வடிவமைப்புடன்கூடிய தடுப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன.

168. அறுது அடிக்கு மேல் அகலம் உள்ள சாலைகளில் நவீன ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், கிரானைட் மத்திய தடுப்பான்களில் செடிகள் வளர்க்கப்படுகின்றன.  

169. இரும்பு மற்றும் கான்கிரீட் கொண்டு கூம்பு வடிவிலான மத்திய தடுப்பான்களில் வர்ணம் பூசப்பட்டு மிளிரும் ஸ்டட்கள் அமைத்து இரவில் வாகனங்களுக்கு பாதுகாப்பு  அளிக்கப்படுகிறது. 

170. பேருந்து சாலைகளில் கான்கிரீட் அடித்தளம் மற்றும் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் மத்திய தடுப்புகளுடன் கூடிய மத்திய தடுப்பான்கள்  அமைக்கப்பட்டிருக்கின்றன.

171. போக்குவரத்து தீவுத் திட்டுகள் நவீன முறையில் கிரானைட் கற்களைக் கொண்டும், அழகிய செடிகளை வளர்த்தும் எழிலாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

172. புதிய மேம்பாலம், சுரங்கப்பாதை பணிகளில் மக்கள் கருத்துக்கு  மதிப்பளித்து, அதன் அடிப்படையில் புதிய பணிகள் நடைபெற்று வருகின்றன.    

173. சாலை மையத்தடுப்பு நடைபாதை ஓரங்கள் மற்றும் மேம்பாலங்கள் ஆகியவற்றில் படியும் புகை, தூசி மற்றும் மண்ணால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பைப் போக்க சோப்பு நீர் கொண்டு சுத்தப்படுத்தப்படுகிறது.

174. ஒவ்வொரு 10 மீட்டர் இடைவெளியிலும்  ஒரு வண்டல் மண் சேகரிப்புத் தொட்டி அமைக்கப்பட்டு மழைநீர் வடிந்து செல்ல வழிவகை செய்யப்படுகிறது.  

175. சாலையின் மட்டத்திற்குச் சமமாக மழைநீர் வடிகால்வாய் அமைப்பதால் சாலையை முழுமையாக பயன்படுத்தும் வகையில் சீரமைக்கப்படுதல். 

176. மழைநீர் வடிகால்வாய்களில் உட்புற ஓரத்தில் குழைவு அமைப்பதன் மூலம் மழைநீர் கால்வாயில் வண்டல் மண் சேகரமாவது தவிர்க்கப்பட்டு,  மழைநீர் விரைந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

177. ஆகாயத்தாமரை மற்றும் மிதக்கும் கழிவுப்பொருட்களை அகற்றுவதற்கு நீரிலும் நிலத்திலும் செல்லும் நவீன வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.      

178. வரைபடத்தின்படி கடகால் போட நடவடிக்கை எடுக்கப்பட்டு, விதிமீறல் இல்லாத கட்டிடங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

179. பூங்காக்களில் கிடைக்கும் நிலத்தடி நீரினை வீணாக்காமல், மறுசுழற்சி மூலம் அதனை பூங்காவிற்கு பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

180. அம்மா மாளிகை முன்புற புதிய பூங்காவிற்கு சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் முறை மூலம் நீர் பாய்ச்ச நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

181. பசுமைப் போர்வையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு வேளாண் பல்கலை கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

182. மாதவரத்தில் கனரக வாகன நிறுத்தம்   

183. காமராஜர் சாலை, டாக்டர். அன்னி பெசன்ட் சாலை சந்திப்பில் பிரத்யேக பேருந்து நிறுத்தத்திற்கு தனி வழி. பேருந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் மேலும் 3 இடங்களில் மாதிரி பேருந்து நிறுத்துமிடங்கள்.  

184. மயிலாப்பூரில் உலகப் பிரசித்திபெற்ற  கபாலீசுவரர் திருக்கோவில்  திருத்தலத்தைச் சுற்றியுள்ள நடைபாதைகளில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டன.  185      எழும்பூர் கெங்கு தெருவில் பெருநகர மாநகராட்சியின் மூலம் நவீன உள்விளையாட்டு அரங்கம்.    

186. மண்டலம் 5, அவதான பாப்பைய்யா சாலையில், பணிபுரியும் பெண்கள் மற்றும் மகளிர் தங்கும் விடுதி     

187. ரிப்பன் மாளிகை வளாகத்தில் இயற்கை நிலக்காட்சி நவீன முறையில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.     

188. ஷெனாய் நகரில் மாநகராட்சி ஊழியர்களுக்கு  அடுக்குமாடி கட்டிடம்    

189. மண்டலம்-5 ல் மத்திய தார் கலவை நிலையம் அமைந்திருந்த இடத்தில் வணிக வளாகம் கட்டும் பணி.  

190. கண்ணப்பர் திடலில் நவீன வணிக வளாகம்   

191. அனைத்து துப்புரவு ஆய்வாளர்களுக்கும் புகைப்படம் எடுக்கும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கைபேசி.

192. சென்னை மாநகராட்சி இணையதளத்தில், பொது மக்கள் துப்புரவுப் பணி  பற்றிய கருத்துகளை பதிவு செய்யும் வசதி      

193. பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் தீயணைக்கும் கருவி, குப்பை கொட்டுவதற்கு தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளன.   

194. ஓட்டுநர்கள் 1,074 பேருக்கு வாகனங்களை விபத்தின்றி இயக்குவதற்கு சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் 2 நாட்கள் பயிற்சி. 

195. அனைத்துத் துறை சார்ந்த கோப்புகள் மற்றும் பதிவேடுகள் கணினியில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.    

196. விளையாட்டுத் திடல்கள் உலகத் தரத்திற்கு நவீனப்படுத்தப்பட்டுள்ளன.

197. நடைபாதைகள் 5 அடியிலிருந்து 8 அடியாக அகலப்படுத்தி உலகத்தரத்திற்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளன.

198. அனைத்து கட்டிடங்களிலும், முகப்பிலும் சென்னை மாநகராட்சியின் செலவிலேயே சாய்தளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.    

199. முக்கியமான 40 பூங்காக்களில் கடிகாரக் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.   

200. சிறுவர் விளையாட்டுத் திடலில் இரும்பு விளையாட்டு உபகரணம் நீக்கப்பட்டு துருப்பிடிக்காத எஃகு கம்பிகளால் ஆன விளையாட்டு உபகரணங்கள்..  

201. மாநகர் முழுவதும் புதியதாக 300 பூங்காக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.    

202. சமுதாயக் கூடங்களை ஆன் லைன் மூலம் முன் பதிவு செய்யும் வசதி.   

203. சமுதாயக் கூடங்களில் சமையல் பாத்திரங்கள், இருக்கைகள், தளவாடச் சாதனங்கள் கட்டணமின்றி பொது மக்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.    

204. அனைத்து பேருந்து சாலைகளிலும் இதுவரை 1207 நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 100 பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட உள்ளன.   

205. கூவம் நதி சிரமைக்கப்பட்டு அதன் இரண்டு பக்கக் கரைகளில் பசுமைப் போர்வையை உருவாக்கும் திட்டம்.  

206. அண்ணா சாலையிலிலிருந்து சி.ஐ.டி.நகர் வரை செல்லும் இணைப்பு சாலையில் எம்95 என்கிற நவீன கான்கிரிட் இயந்திரம் மூலம் சாலை அமைத்து 24 மணி நேரத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது வரலாற்றுச் சாதனை. 

207. சொத்து வரி நிர்ணயம் செய்வதற்கு புதிய புவியியல் தகவல் முறைமை நடைமுறைபடுத்தப்படுகிறது.   

– நாளை பார்க்கலாம்.

Leave a Comment