சொந்த வாகனத்தில் பயணித்த மேயர்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 465

முரசொலி பத்திரிகையில் மாமன்ற உணவுச் செலவு குறித்த செய்தி வெளியிட்டதும் உடனே மேயர் சைதை துரைசாமி, கண்டுகொள்ளாமல் அமைதி காப்பார் என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால், மாமன்றக் கூட்டத்தில் இந்த விவகாரத்திற்குப் பதில் கூறுவதாகச் சொல்லி, திமுகவினரின் முந்தைய கால செலவினங்களைப் பட்டியலிட்டு அசத்தினார். திமுகவை விட அதிமுக காலத்தில் குறைவான செலவே செய்யப்பட்டுள்ளது என்பதை விளக்கினார்.

இந்த நிலையில் முந்தைய திமுக மேயர் பதவியில் இருக்கும்போது எப்படியெல்லாம் பதவியைப் பயன்படுத்தினார் என்ற தகவல்களும் வெளியாகின.

அந்த வகையில் திமுகவின் மா.சுப்பிரமணியன்  மேயராக பதவி வகித்த காலகட்டத்தில் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அலுவலர், பணியாளர்களுடன்,  அவரது வீட்டுக்கு என்று தனியாக முகாம் அலுவலர்கள் என 2 நபர்களும், அலுவலக உதவியாளர்கள் என வீட்டுக்கு 2 நபர்கள் நியமிக்கப்பட்டனர்.  வீடு, அலுவலக உபயோகத்திற்கு ஓட்டுநர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டார்.

இவர்கள் அனைவருக்கும் சம்பளமாக ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 57 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. இந்தப் பணம் முழுக்க முழுக்க மாநகராட்சிப் பணம், அதாவது மக்களின் வரிப்பணம். இதுதவிர மா.சுப்பிரமணியன் தனது வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திய வாகனம் மற்றும் எரிபொருளுக்கும் சுமார் 12.45 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. சொந்த வாகனம் இருந்தாலும் அதனை பயன்பாடுத்தாத திமுக மேயராக சுப்பிரமணியன் இருந்தார்.

ஆனால், மேயர் சைதை துரைசாமி வித்தியாசமான மேயராக இருந்தார். மாநகராட்சி வாகனத்தைப் பயன்படுத்தாமல் சொந்த வாகனத்தைப் பயன்படுத்தினார்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment