மார்ச் 25 – முதல் கலர் டிவி அறிமுகமான நாள்
இப்போது தொலைக்காட்சியில் 3டி தொழில்நுட்பமும், யு.ஹெச்.டி. எனப்படும் அல்ட்ரா ஹை டெபனிஷன் தொழில்நுட்பமும் அறிமுகமாகிவிட்டது. அதனால் துல்லியமாகவும் தெளிவாகவும் படங்களைக் காணமுடிகிறது. இன்னும் சில நாட்களில் வீட்டில் இருக்கும் கண்ணாடிகளிலும், கார் கண்ணாடிகளிலும்கூட தொலைக்காட்சியைக் கொண்டுவரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதற்கெல்லாம் முன்னோடியாக முதன் முதலாக வண்ணத் தொலைக்காட்சி அறிமுகமான தினம் இன்றைய மார்ச் 25, 1954-ம் ஆண்டு.
முதலாவது வண்ணத் தொலைக்காட்ச் பெட்டியை RCA எனப்படும் ரேடியோ கார்ப்பரேஷன் ஆஃப் அமெரிக்கா என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியது. அன்று வெளியிடப்பட்ட வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டியின் திரையின் அளவு 12 இன்ச். அன்றைய விலை ஆயிரம் டாலர்கள்.
1920-ம் ஆண்டிலேயே கருப்பு வெள்ளை தொலைக்காட்சி அறிமுகமாகிவிட்டாலும், அது வண்ணத் தொலைகாட்சியாக 1954-ம் ஆண்டுதான் மாறியது. ஆரம்ப காலங்களில் ரேடியோவுடன் இணைந்துதான் தொலைக்காட்சி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று தொலைக்காட்சி கணினியுடன் இணைந்து செயல்படும் அளவுக்கு ஸ்மார்ட் டி.வி-யாக மாறிவிட்டது. செல்போனிலேயே டி.வி. பார்த்துக்கொள்ள முடிகிறது. வாட்ச்சில் தொலைக்காட்சி பார்க்க முடிகிறது.
தமிழகத்தில் திமுக கொடுத்த வண்ணத் தொலைக்காட்சி குடிசைகளில் உள்ளோரையும் அடுத்தகட்டத்துக்குக்கொண்டு போனது. எத்தனை மாற்றங்கள் கண்டாலும், தொலைக்காட்சி என்பது ஒரு யுகத்திற்கான தேவையாகவே இன்றும் உள்ளது.
