மார்ச் 30 – வான்கா பிறந்த நாள்.
மனிதர்கள் மொழியைக் கண்டுபிடித்து பேசுவதற்கு முன்பே ஓவியங்கள் மூலம்தான் தங்கள் எண்ணங்களை பரிமாறிக்கொண்டார்கள். இதற்கு ஆதாரமாக இருப்பவைதான் குகை ஓவியங்கள்.
ஓவியக்கலையைப் புரட்டிப்போட்ட கலைஞன் என்றால், அவன் ஹாலந்து நாட்டில் பிறந்த வின்சென்ட் வான்கா மட்டும்தான். 1853-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதியான இன்றுதான் வான்காவின் பிறந்த நாள்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்த வான்கா, வாழ்நாள் முழுவதும் உணவுக்காகவும் நிம்மதிக்காகவும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருந்த மகத்தான கலைஞன். படிப்பு ஏறாத நிலையில், வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் காலம் முழுவதும் குழம்பி நின்றவந்தான் வான்கா. காதலுக்கு இலக்கணமாகவும் இவனை சொல்லலாம். காதலி விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக தன் காதை அறுத்துக்கொடுத்தவன்.
ஓவியம்தான் தன்னுடைய துறை என முடிவெடுத்து படங்களை வரைந்து தள்ளினான். வாழும் காலத்தில் இவன் ஓவியத்தை யாருமே அங்கீகரிக்கவில்லை. வாழ்க்கையில் வான்கா மீது அன்பும் கரிசனையும் காட்டிய ஒரே நபர் அவனது சகோதரன் மட்டுமே. இவன் வரைந்த ஓவியங்கள் சரித்திரத்தையே மாற்றி அமைக்கப்போகிறது என்று யாருமே அறிந்திருக்கவில்லை. அதனால் இவரது ஓவியம் ஒன்றுகூட விலை போகவே இல்லை. இன்று அவரது ஒவ்வொரு ஓவியமும் பில்லியன் டாலரில் விலை பேசப்படுவதுதான் வரலாற்று ஆச்சர்யம்.
காதலை இழந்து, ஓவியத் திறனுக்கான அங்கீகாரம் இழந்து கிட்டத்தட்ட பைத்தியமாக மாறி… தன் வாழ்க்கையை தானே முடித்துக்கொண்டவன். இன்று பிறந்த ஓவிய மாமேதை என்று புகழப்படும் வான்காவுக்கு ஒரு ஓவிய வணக்கம் சொல்வோம்.
