நச்சுன்னு பத்து தத்துவங்கள்

வார்த்தைகளே வரம்

ஒரு சில வார்த்தைகள் மனிதருக்க்கு புத்துணர்ச்சி கொடுப்பது மட்டுமின்றி, வாழ்க்கை உண்மைகளை புட்டுப்புட்டு வைத்துவிட்டு. என்றென்றும் உண்மையான பத்து தத்துவங்கள் இங்கே, படித்துப் பாருங்கள்.

அத்தனையும் உண்மை என்பது புரியும்.

  • மனிதனால் ஒரு புழுவைக்கூட படைக்க முடியாது. ஆனால், அவன் எண்ணற்ற கடவுள்களை படைத்து விடுகிறான். –  வில்லியம்ஸ்
  • மாட்டிக்கொண்ட பிறகு கேட்கப்படும் மன்னிப்புகள் பின்விளைவுகளுக்குப் பயந்து கேட்கப்படுகிறதே தவிர, திருந்தியதால் அல்ல. – அரூபி
  • தனிமை என்பது தனியாக இருப்பதல்ல, என்னோடு நான் நிம்மதியாக இருப்பது. – வே.பூபதி
  • மனிதனின் தவறுகளில் பெரும்பாலானவை நாவிலிருந்தே உருவாகின்றன -அரிஸ்டாடில்
  • கரையான்கள் கஷ்டப்பட்டு கட்டியதைப் பாம்புப்புற்று என்று பறை சாற்றுகிறார்கள். – இறையன்பு
  • உன்னிடம் இருப்பதைத்தான் நீ மற்றவர்களுக்கு கொடுக்க முடியும். அது அன்போ, வெறுப்போ… – ஓஷோ
  • தன்னந்தனியாக நிற்பவனை விட அதிக சக்தி வாய்ந்தவன் உலகில் கிடையாது. – கிப்சன்
  • உங்களிடம் கேட்கப்படும் ஒவ்வொரு ஆலோசனைகளுக்கும் அவர்களிடம் ஏற்கனவே ஒரு முடிவு இருக்கும். – கலீல் ஜிப்ரான்
  • தங்கமுலாம் பூசிய கல்லறைகளிலும் புழுக்களே உள்ளன. – ஷேக்ஸ்பியர்
  • கண்கள் பாதையைத் தொலைத்துவிட்டு நிற்கும்போதெல்லாம் கால்கள் ஒரு புதிய பாதையைக் கண்டுபிடித்துத் தரும் – பராரிகள்

Leave a Comment