கிளியைத் தூக்கி ஜெயிலில் போடுங்க

அட்டகாசமான நகைச்சுவை

எத்தனை முறை படித்தாலும் சில நகைச்சுவை மீண்டும் மீண்டும் சிரிக்க வைப்பவை. அப்படிப்பட்ட அட்டகாசமான இரண்டு நகைச்சுவை இங்கே

கிளிக்கு ஜெயில்

ரோட்டில் ஒரு மாணவன் படு வேகமாக டூவீலர் ஓட்டிக்கொண்டு போனான். அந்தப் பக்கமாக பறந்த ஒரு கிளி, அவன் மீது மோதவே… அவன் கீழே விழுந்தான். கிளியும் கிழே விழுந்து மயங்கிவிட்டது. பைக்கில் இருந்து விழுந்தவன் உடனே அந்தக் கிளிக்கு முதல் உதவி செய்து பத்திரமாக ஒரு கூண்டுக்குள் போட்டு அடைத்து வைத்தான்.

கொஞ்சநேரம் கழித்து கிளி கண்ணைத் திறந்து பார்த்தது. கூண்டுக்குள் இருப்பதைப் பார்த்தது. உடனே தனக்குள், ‘அச்சோ… அந்தப் பையன் ஸ்பாட்ல அவுட் போல. அதான் என்னைத் தூக்கி ஜெயில்ல போட்டிருக்காங்க’ என்று வருத்தப்பட்டதாம்,

கடவுள் தந்த வரம்

ஒருத்தன் கடவுளிடம் போய் தினம் தினம் ஒரே வேண்டுகோள் வைத்தான். ‘எனக்கு ஒரு வண்டி… பை நிறைய பணம்… ஒரு வேலை… நிறைய பெண்கள் கொடு’ என்று கேட்டுக்கொண்டே இருந்தான்.

இவன் தொந்தரவு தாங்கமுடியவில்லை என்று கடவுள் உடனே அவன் ஆசையை நிறைவேற்றினார்.

அவன் இப்போது பெண்கள் பஸ்ஸுக்கு கண்டக்டராக இருக்கிறான்.

Leave a Comment