அபாய கட்டத்தில் ஹீலியம்
பார்ட்டி என்றாலே என்ன செய்வார்கள். கலர் பேப்பர் ஒட்டி, நிறைய நிறைய பலூன் பறக்கவிட்டு, கேக் வைச்சுக் கொண்டாடுவார்கள்.
உண்மைதான். பலூனை பறக்கவிடுறது எல்லா வகை கொண்டாட்டங்களிலும் முக்கிய ஃபேஷனாக மாறிவருகிறது. ஆனால் பலூன் பறக்கவிடுவதை தடை செய்யவேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.
ஏன்… என்னாச்சு?
பலூன் பறப்பதற்காக அதுக்குள் ஹீலியம் வாயு செலுத்தப்படுது. இது இயற்கையாக கிடைக்கும் வாயு என்றாலும், எல்லா இடங்களிலும் கிடைப்பது அல்ல. அமெரிக்கா, அல்ஜீரியா, ரஷ்யாவில் மட்டும்தான் கிடைக்கிறது. ஹீலியம் வாயு கிடைக்கும் அளவும் இப்போது குறைந்துகொண்டே வருகிறது. அதனால்தான் ஹீலியம் வாயுவை வீணடிக்க வேண்டாம் என்கிறார்கள்.
இப்போது பலவிதமான மருத்துவ ஆய்வுக்கு ஹீலியம் வாயு பயன்பட்டு வருகிறது. இப்போதுபோல் தொடர்ந்து ஹீலியத்தை வீணடித்துவந்தால், விரைவில் இந்த வாயு கிடைக்காத நிலை வந்துவிடும்.; அதனால் அத்தியாவசியமான தேவை தவிர எதற்கும் ஹீலியம் பயன்படுத்த வேண்டாம் என்கிறார்கள். நியாயமான கோரிக்கைதான்
