வாழ்க்கையில் மறக்கக்கூடாத ஆறு உண்மைகள்

நிஜமான ஆச்சர்யங்கள்

இந்த பூமியில் பிறப்பு என்பது மனிதர்கள் கையில் இல்லை, இறப்பு என்பதும் அவர்கள் நினைப்பது போன்று நடப்பதில்லை. ஆனால், வாழ்க்கையை அவர்கள் விருப்பம் போல் வாழ முடியும். அதற்கு வழிகாட்டும் ஐந்து உண்மைகளை ஒருபோதும் மறக்கக் கூடாது.

  • இந்த உடல் மட்டும் தான் உங்களுக்குச் சொந்தமானது. ஆரோக்கியம் இல்லையென்றால் எதையும் அனுபவிக்க முடியாது. 
  • பிறந்த எல்லோரும் மரணம் அடைவது உறுதி. பணம், செல்வாக்கு, புகழ் மூலம் மரணத்தைத் தடுக்க முடியாது.
  • யாரும் யாருக்காகவும் படைக்கப்படவில்லை. நெருக்கமான உறவு என்றாலும் மரணம் அடைந்தவருக்காக யாரும் சாவதில்லை.
  • இன்று இன்பம் தரும் காதல் நாளை துன்பம் தரலாம். ஆக, எதுவுமே வாழ்க்கையில் நிரந்தரம் இல்லை
  • நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களுக்காகவும், நடந்துமுடிந்த செயலுக்கு வருந்துவதாலும் எதுவும் மாறப்போவதில்லை. 
  • இந்த நிமிடம் மட்டுமே நிஜமானது. ஆகவே, மகிழ்ச்சியாக வாழுங்கள்..

Leave a Comment