ஆடம்பரத் திருமணங்களுக்குத் தடை போடலாமா..?

ஞானகுரு பதில்கள்

ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.

கேள்வி : ஆடம்பரத் திருமணங்களுக்கு தடை போட்டுவிடலாமா..? நிறைய நடுத்தரக் குடும்பங்கள் கடனில் தத்தளிக்கிறதே..?

  • ஜி.மஞ்சுளா, பெரியகுளம்.

ஞானகுரு :

கல்யாணம் எனப்படும் ஒரு நாள் கொண்டாட்டத்திற்கு கிட்டத்தட்ட 10 ஆண்டு கால சேமிப்பை ஏழைகளும் நடுத்தரவர்க்கத்தினரும் இழந்துவிடுகிறார்கள். இந்த செலவை சரிக்கட்டுவதற்கு அடுத்த ஐந்து முதல் 10 ஆண்டுகள் நிதி நெருக்கடியில் மாட்டிக்கொள்கிறார்கள்.

அடுத்தவருடன் ஒப்பிட்டு, ஊருக்காகவும், உறவுக்காகவும், பெருமைக்காகவும் ஆடம்பரத் திருமணம் செய்வது நிதி மேலாண்மையில் அவசியமில்லாத செலவு என்பது உண்மை. அதற்காக கல்யாணச் செலவுக்கு தடை அவசியம் இல்லை. ஏனென்றால், நிறைய குடும்பத்தினர் இந்த நாளில் மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அனுபவிக்கிறார்கள். அந்த சந்தோஷத்தை விட்டுத்தர அவசியமில்லை.

எனவே, திருமணச் செலவு என்பது கல்யாணம் செய்யும் ஆணும், பெண்ணும் சுயமாக சம்பாதித்த பணத்தில் மட்டுமே செய்வது என்று திட்டமிட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பணத்தின் அருமை புரியும். பெற்றோர் பணம் என்பதாலே பிரமாண்ட மண்டபம், 60 வகை உணவு என்று ஆடம்பரமாக செலவழிக்கிறார்கள். சொந்த பணம் என்றால் எளிமையாக திருமணம் முடித்துக்கொள்வார்கள். இதுதான் முதிர்ச்சியான நடவடிக்கை..

Leave a Comment