பெண் சாமுத்ரிகா லட்சணம்

பாதம் ரகசியம்

ஒரு பெண்ணின் அழகை அவரது முகம், சிரிப்பு, ஸ்டைல் ஆகியவற்றைப் பார்த்து சொல்லிவிடலாம். அந்த பெண் ஆரோக்கியமாக இருக்கிறாரா… உடம்பை நன்றாக பராமரிக்கிறாரா என்பதை எப்படி அறிவது..?

சாமுத்ரிகா லட்சணத்தில் அதற்கு ஒரு வழி இருக்கிறது. ஒரு பெண்ணின் குதிகாலைப் பார்த்து அவரது ஆரோக்கியத்தைச் சொல்லிவிடலாம். அதாவது, குதிகாலில் பாதவெடிப்புகள் இருக்கிறது என்றால், அவர் முகத்தைப் பராமரிக்கும் அளவுக்கு உடல் ஆரோக்கியத்துக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுப்பவர் இல்லை என்று அர்த்தம். பொதுவாக, சருமம் வறண்டு போவதால் பாத வெடிப்புகள் ஏற்படுகின்றன. அதிக உடல் எடை, உடலில் நீர்ச்சத்து குறைவதாலும் பாதவெடிப்பு ஏற்படலாம்.

இதை சரி செய்ய பெண்கள் ரொம்பவும் சிரமப்பட அவசியமில்லை. வேப்பிலையை அரைத்து பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இரவில் உறங்குவதற்கு முன், ஆலிவ் ஆயிலை பாதங்களில் தடவி மசாஜ் செய்து வந்தால் விரைவில் மாற்றம் வரும்.

எலுமிச்சை தோலால் பாதங்களை தேய்த்து கழுவினால் வெடிப்பில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும். வெதுவெதுப்பான நீரில் வினிகரைக் கலந்து கால்களை அரை மணி நேரம் ஊறவைத்தால் இறந்த செல்கள் நீங்கிவிடும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடல் பருமனாக இருப்பவர்கள், எடையைக் குறைத்தாலே பித்த வெடிப்புகளை அகற்ற முடியும். ஆரோக்கியமே அழகு தரும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment