சென்னை மாமன்றத்தில் முரசொலிக்குப் பதில்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 462

பெருநகர சென்னை மேயராக சைதை துரைசாமி இருந்தபோது, அவரின் செல்வாக்கைக் குறைக்கும் வகையில் திமுக பத்திரிகையான முரசொலியில் ஒரு பொய் செய்தி வெளியானது.

அதாவது, சென்னை மாமன்ற உறுப்பினர்களுக்கு மேயர் சைதை துரைசாமி காலத்தில் உணவுக்கு மட்டும் 61 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி முரசொலியில் வெளியானது.

இந்த செய்தியின் மூலம் மேயர் மக்கள் பணத்தை மேயர் சைதை துரைசாமி தேவையில்லாமல் விரயம் செய்ததாக ஒரு மாயத் தோற்றம் ஏற்படுத்த முயற்சி செய்தார்கள். இந்த விமர்சனத்தைக் கண்டு மேயர் சைதை துரைசாமி கொஞ்சமும் அசரவில்லை. சென்னை மக்களுக்கு உண்மையை எடுத்துச்சொல்லும் ஒரு நல்ல வாய்ப்பாக இதை பயன்படுத்திக்கொண்டார்.

முரசொலி நாளிதழில் வெளியான செய்திக்கு சென்னை மாமன்றத்தில் விளக்கமாகப் பதில் கொடுத்தார் மேயர் சைதை துரைசாமி. அவர் கொடுத்த பதிலில் இருந்து குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் பார்க்கலாம்.

‘’நான், மேயராயாகப் பதவி ஏற்றது தொடங்கி மே 2015-ம் ஆண்டு வரையான 44 மாதங்களில் 43 கூட்டங்கள் நடத்தப்பட்டு  61.53  லட்சம் ரூபாய் உணவுக்கு செலவழிக்கப்பட்டுள்ளதாக முரசொலி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் 44 மாதங்களில்  43 கூட்டங்களில் திமுக செலவழித்த  தொகை எவ்வளவு தெரியுமா..? அது, 62 லட்சத்து 26 ஆயிரத்து 555 ரூபாய் என்று முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார். அடுத்தடுத்து சைதையார் கொடுத்த விளக்கம் அசத்தல் ரகம்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment