திருமணம் உளவியல் உண்மைகள்

மகிழ்ச்சிக்கு ரெடி

திருமணத்துக்கு ரொம்பவும் ஆர்வம் காட்டுபவர்கள் தான், திருமணத்திற்குப் பிறகு ரொம்பவும் ஏமாற்றம் அடைகிறார்கள். திருமணம் பற்றி தெளிவாகப் புரிந்துகொண்டால் வாழ்க்கைப் பயணம் சிறப்பாக இருக்கும்.

  • திருமணத்தில் இரண்டு நபர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது. ஆனால், இரண்டு குடும்பத்தை இணைக்க முயற்சிப்பதே நிறைய பிரச்னைகளுக்குக் காரணமாகிறது.
  • கஷ்டப்பட்டாவது இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தால் போதும் என்று நினைப்பது தவறு. கொஞ்சம் விட்டுக் கொடுத்தாவது மகிழ்ச்சியாக வாழ்வதே நல்லது.
  • திருமணம் முடித்துவைத்தால் பொறுப்பு வந்துவிடும் என்று கட்டுப்பாடு இல்லாத நபர்களுக்கு திருமணம் செய்துவைப்பது சரியில்லை. திருமணத்தால் யாரும் மாற மாட்டார்கள்.
  • குழந்தைக்காக வாழ்கிறோம் என்ற தியாக வாழ்க்கை தவறு. அன்பான பெற்றோராக இருப்பதே குழந்தைக்கு நன்மை தரும்.
  • திருமணத்திற்குப் பிறகு முதல் உறவு என்பது கணவன் அல்லது மனைவியாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், திருமணத்திற்குப் பிறகும் பெற்றோரை முக்கியமாகக் கருதுவதால் பல திருமணங்கள் உடைந்துவிடுகின்றன.

இந்த புரிதல்களுடன் திருமணம் முடித்துக்கொண்டால் ஒருவரையொருவர் மதித்து நல்ல வண்ணம் வாழலாம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

Leave a Comment