இயற்கை எனும் மெகா பிரபஞ்சத்தில் மனிதன் என்பவன் தூசுக்கு சமானம். மனிதர்களுக்கு என இயற்கை எந்த சலுகையும் காட்டுவதில்லை. ஒரு கொசுவும் மனிதருக்கும் இயற்கைக்கு ஒன்றுதான். எனவே, எந்த ஒரு உயிருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை.
எல்லோருக்கும் ஒளி தருகிறது, எல்லோருக்கும் மழை பொழிகிறது. எல்லோருக்கும் 24 மணி நேரம் தருகிறது.
அனைத்து மனிதர்களும் வெற்றி பெறுவதற்கு கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறது. அந்த கதவுகளை அடையாளம் கண்டு நுழைந்தவர்கள் மட்டும் வெற்றி அடைகிறார்கள்.
ஏழை, பணக்காரர், அறிவாளி, முட்டாள், நல்லவர், கெட்டவர் என்றும் யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. எல்லோரையும் தன்னிடம் திரும்ப அழைத்துக்கொள்கிறது.
இந்த பூமியில் வீடு, உறவு, புகழ் என்று எதைப் பெற்றாலும், அதை எல்லாம் திரும்பப்பெற்றுக்கொண்டு, வெறும் கையுடன் கதையை முடித்துவிடுகிறது.
இயற்கையின் முன்னால் மனிதன் சிறியவன் தான், ஆனால் அந்தச் சிறிய வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழம் முடியும். நிரந்தரமில்லாத இந்த உலகில், மகிழ்ச்சியை மட்டும் நிரந்தரமாக்குங்கள். வாழும் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.
