பழமொழி சொல்வது இதுதான்.
களவும் கற்று மற என்ற பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படி என்றால், திருடுவது எப்படின்னு கத்துக்கிட்டு, அதுக்குப் பிறகு அதை மறந்துடச் சொல்கிறார்களா..?
நம் பெரியவர்கள் அப்படியெல்லாம் சொல்லவே இல்லை… சொல்லவும் மாட்டாங்க. அவங்க சொன்னது, ’களவும் கத்து மற’ என்பதைத்தான்.. அதுதான் இப்போ களவும் கற்று மறன்னு ஆகிப்போச்சு.
களவும் கத்து மறன்னா என்ன அர்த்தம்…
கத்துன்னா பொய், கயமை என்பதுதான் அர்த்தம்.
ஓ… அப்படின்னா களவு செய்வதையும் பொய் சொல்வதையும் மறந்துவிட வேண்டும் என்றுதான் சொன்னார்களா நம் முன்னோர்கள்?
இனியாவது சரியாகச் சொல்ல கற்றுக்கொள்ளூங்கள். இதை கற்றவுடன் மறந்துவிட வேண்டாம்.
