மேயர் அலுவலக உணவுச் செலவு பூஜ்ஜியம்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 464

முரசொலி நாளிதழில் பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமி காலத்தில் உணவுக்காக அதிகம் செலவழித்திருக்கிறார் என்று சித்தரிக்கும் வகையில் எழுதப்பட்ட செய்திக்கு மாமன்றக் கூட்டத்தில் தகுந்த பதிலடி கொடுத்தார். அதாவது 155 கவுன்சிலர்கள் இருந்த திமுக காலத்தில் ஆன செலவை விட, 200 கவுன்சிலர்கள் கொண்ட அதிமுக காலத்தில் குறைவாகவே செலவு செய்யப்பட்டுள்ளது என்று ஆதாரத்துடன் நிரூபித்தார்.

அது மட்டுமின்றி மேலும் அவர், ‘’2006 முதல் 2010 வரை, திமுக மேயர் அலுவலகத்திற்கு மட்டும் உணவுச் செலவினமாக 7 லட்சத்து 85 ஆயிரத்து 296 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.  ஆனால், 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை என்  மேயர் அலுவலகத்தில் உணவுக்காக  செலவழிக்கப்பட்ட  தொகை  எவ்வளவு தெரியுமா..? பூஜ்யம். ஆம், ஒரு ரூபாய் கூட  செலவு இல்லை. 

இன்னும் சொல்ல வேண்டும்  என்றால் மேயர் அலுவலகப் பணியாளர்களின்  சிற்றுணவுச் செலவைக் கூட மாநகராட்சியின்  செலவினத்தில்  மேற்கொள்ளாமல், என் சொந்தப் பணத்திலிருந்துதான் செலவிடப்பட்டது. இந்த உண்மைகளை  மறைத்து திமுக காட்டும்  பொய்க் கணக்கு மக்கள்  மத்தியில்  எடுபடாது..’ என்று மேயர் சைதை துரைசாமி சூடாக பதில் கொடுத்தார்.

இந்த பதிலைக் கேட்டு அத்தனை திமுகவினரும் ஆடிப் போனார்கள். மாநகராட்சி செலவினங்களை எழுதினால், பழைய கணக்கெல்லாம் யாரும் பார்க்க மாட்டார்கள், பதில் பேச மாட்டார்கள் என்று நினைத்த திமுகவினர், இப்படி மாமன்றக் கூட்டத்தில் வைத்தே மேயர் சைதை துரைசாமி பதில் கொடுப்பார் என்று எதிர்பாராமல் அதிர்ந்து நின்றார்கள். இதையடுத்து, முந்தைய மேயர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்று சில பத்திரிகையாளர்கள் மாநகராட்சி ஆவணங்களைத் தேடிப் படித்து சில செய்திகளை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினாகள்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment