வாழ்க்கை சலிப்பாக இருக்கிறதே..?

ஞானகுரு பதில்கள்

ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.

கேள்வி : வாழ்க்கையில் சலிப்பு ஏற்படக் காரணம் என்ன?

  • கவிதா, சங்கரன்கோவில்.

ஞானகுரு :

தினமும் சூரியன் கிழக்கில்தான் உதிக்கிறது. ரோஜா எப்போதும் ஒரே நிறத்தில்தான் பூக்கிறது. அலைகள் எப்போதும் ஒரே மாதிரியே வந்துபோகின்றன. இவை சலிப்புக்கு உள்ளாகி எதையும் மாற்றிக் கொள்வதில்லை.

ஆனால், மனிதன் மட்டும் சலிப்படைந்துவிடுகிறான். ஒருவகையில் சரவணபவன் சாம்பார் இட்லி சுவையாக இருந்தாலும்,  தினமும் அதையே சாப்பிட்டால் சலிப்பு தோன்றுவது சகஜம்தான். அதனால், இயந்திர வாழ்க்கையை ஒரே போன்று வாழாமல் புதிது புதிதாக முயன்று பாருங்கள். கட்டிலில் படுக்காமல் தரையில் படுங்கள். பஸ்ஸைத் தவிர்த்து ரயில் பயணம் செய்யுங்கள். இப்படி எதையாவது மாற்றுங்கள், சுவாரஸ்யம் வந்துவிடும்.

…………………..

கேள்வி : புரிதல் இல்லாது வாழ்க்கை நடத்துபவர்களை எப்படி சரிசெய்வது?

  • டி.செல்லத்துரை, பாத்திமா நகர்.

ஞானகுரு :

ஒருவரையொருவர் யாராலும் முழுமையாகப் புரிந்துகொள்ளவே முடியாது. எனவே, விட்டுக் கொடுப்பவரும் குறைகளுடன் ஏற்றுக்கொள்வதுமே வாழ்க்கை நடத்துவதற்கு எளிதான வழி. ஒருவரை புரிந்துகொண்ட பிறகு வாழ்க்கை நடத்துவது என்றால், அலை நின்ற பிறகு குளிப்பதாக மாறிவிடும்.

Leave a Comment