இப்படி ஒரு தலைவர்
பெருந்தலைவர் காமராஜர் முதல்வரான பிறகு, விருதுநகரில் இருந்த அவரது அம்மாவை சென்னைக்கு அழைத்துக்கொள்வார் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனா, அவர் அம்மாவைக் கூப்பிடவே இல்லை.
இதற்கு காரணம் அவரது அம்மாவுக்கும் தெரியவில்லை. இனியாவது சென்னைக்குப் போய் மகனுக்கு தன் கையினால் சமைத்துப்போட ஆசைப்படார். அதனால் மெட்ராசுக்குப் போன காமராஜரோட நண்பர்கிட்ட, ‘என்னை கூப்பிடச் சொல்லுப்பா’ என்று சொல்லி அனுப்பினார்.
அவரும் காமராஜிடம் போய் தகவல் சொன்னார். அடுத்து வரும்போது அம்மாவை அழைத்துவரவா என்று கேட்டார். அதற்கு காமராஜர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?
“அடப்போப்பா , எனக்கு தெரியாதா அம்மாவை கொண்டு வந்து வச்சிருக்கணுமா வேணாமான்னு? அம்மா தனியாத்தான் வருவாங்க. அப்புறம் அவங்களைப் பார்க்க நாலு பேரு வருவான். அப்புறமா அம்மாவை பாக்க, ஆத்தாவை பார்க்கன்னு பத்து பேரு வருவான். இங்கேயே டேரா போடுவான்.
இங்க இருக்குற டெலிபோனை யூஸ் பண்ணுவான். முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசறேன்னு அதிகாரிகளை .மிரட்டுவான் எதுக்கு வம்புன்னு தான் அவங்களை விருதுநகர்லயே விட்டு வச்சிருக்கேன்” என்றாராம்.
அடேங்கப்பா… இப்படியும் ஒரு தலைவரா…
