புத்தரும் இந்துக் கடவுள்களில் ஒருவரா?

மதமே மந்திரம்

கேள்வி : புத்தர் இந்துக் கடவுள்களில் ஒருவரா..? இது எனக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது. விடை தாருங்கள்.

  • சி.ஆர்.ரகுநாதன், மேலநத்தம்.

ஞானகுரு :

கடவுள் இல்லை என்று சொன்ன புத்தரை கடவுளாக மாற்றிவிட்டார்கள். புத்தர் எந்த மதத்தையும் நிறுவவில்லை.

நான் கடவுள், நான் கடவுளின் பிள்ளை, நான் கடவுளின் தூதன், நான் கடவுளின் வேலைக்காரன் என்று எதுவுமே புத்தர் சொல்லவில்லை. துன்பத்தில் இருந்து மனிதர்கள் விடுபடுவதற்கு புத்தர் ஒரு வழியைக் காட்டினார், அவ்வளவுதான். அதை கடைப்பிடிப்பதற்கு எந்த வழியும் காட்டவில்லை, கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை.

புத்தர் எந்த அதிசயமும் நிகழ்த்தவில்லை, எந்த அற்புதமும் நடத்தவில்லை. வேதங்கள் எழுதவில்லை, மந்திரங்கள் உருவாக்கவில்லை. எனவே, புத்தர் கடவுளே இல்லை.

ஆனால், இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவ மரபில், புத்தரை விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்பதாவது அவதாரமாகச் சேர்த்துள்ளனர். இது பெளத்த மதத்தை இந்து மதத்தில் இணைத்துக்கொள்ளும் ஒரு சமூக முயற்சியாகவே பார்க்க முடியும்.

புத்தரை ஒரு மதத்தின் எல்லைக்குள் அடைப்பதை விட, அவரது போதனைகளை வாழ்வியல் நெறிமுறைகளாகப் பார்ப்பதே சிறந்தது. அவர் இறைவனை விட, ஒரு மனிதர் எப்படித் தனது மனதை ஒழுங்குபடுத்தி அமைதி பெறலாம் என்பதையே முன்னிறுத்தினார். புத்தரைக் கடவுளாகப் பார்க்காமல், அவர் காட்டிய அன்பு பாதையை கடைப்பிடிப்பதே அவருக்கு செய்யும் உண்மையான மரியாதை.

Leave a Comment