வீட்டுக்கு ஒரு பிள்ளை போதுமா..?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : இன்று வீட்டுக்கு ஒரு பிள்ளை போதுமா..? எதிர்காலத்தில் அந்தப் பிள்ளை பெற்றோரை காப்பாற்றாவிட்டால் என்னவாகும்?

  • எம்.சிவசங்கரி, கோவிலூர்.

ஞானகுரு :


மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அதையே மனிதர்கள் அன்றும், இன்றும் பின்பற்றுகிறார்கள், எதிர்காலத்திலும் பின்பற்றுவார்கள். கர்ப்பத்தடை பற்றி அறிந்துகொள்ளாத காலத்தில் எல்லோரும் நாலைந்து பிள்ளைகள் பெற்றுக்கொண்டனர். இப்போது இரண்டிலிருந்து ஒன்றுக்கு வந்திருக்கிறது. எதிர்காலத்தில் இதுவும் இல்லாமல் போகலாம்.

பிள்ளைகளைப் பெறுவதும் வளர்ப்பதும் உயிரின் நியதி, இதற்கு கூலி வாங்க நினைத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். எந்த விலங்கும், பறவையும் முதிய வயதில் பிள்ளையை நம்பி வாழ்வதில்லை. பெறுவதும் வளர்ப்பதும் போதும், எதையும் எதிர்பார்க்க வேண்டாம்.

பிள்ளைகள் பெற்றோரைப் பார்த்துக்கொண்டால் நல்லது. பெற்றோரை கண்டுகொள்ளவில்லை என்றாலும் நல்லது. இந்த உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். அதுவே மகிழ்ச்சி.

Leave a Comment