மனிதருக்கு ஏழு பிறவிகள் என்பது உண்மையா..?

ஞானகுரு பதில்கள்

ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், போதுமான பணம், ஆறுதல் தரும் உறவுகள் கிடைப்பதற்கு வழி காட்டும் பாதையே ஞானகுரு. வாசகர்களின் கேள்விக்கு ஞானகுரு தரும் பதில்களை படித்துப் பாருங்கள், புதிய பாதை தென்படும்.

கேள்வி : மனிதர்களுக்கு ஏழு பிறவி என்பது உண்மையா?

  • டி.விஜயலட்சுமி, சமயநல்லூர்.

ஞானகுரு :

இன்னும் சில உண்மைகள் தெரியுமா? சத்தியலோகத்தில் பிரம்மன் இருக்கிறான். தபோலோகத்தில் தேவதைகளும், ஜனோலோகத்தில் பித்ருக்களும் வசிக்கிறார்கள். மஹர்லோகம் முனிவர்களுக்கானது. சொர்க்கலோகத்தில் இந்திரன் முதலான தேவர்களும், புவர்லோகத்தில் கிரகங்கள், நட்சத்திர தேவதைகள் வாழ்கிறார்கள். கடைசியான பூலோகத்தில்தான் நீங்கள், நான் விலங்குகள், பறவைகள் போன்ற உயிரினங்கள் வாழ்கிறோம். இவை எல்லாமே பூமியைத் தாண்டி இருக்கும் உலகங்கள்.

பூமிக்குக் கீழே ஏழு உலகங்கள் உண்டு. அதலலோகத்தில் காமுகர்களும், விதலலோகத்தில் அரக்கர்களும் இருக்கிறார்கள். சுதலலோகத்தில் மகாபலி வசிக்கிறார். தலாதல லோகத்தில் மாயாவிகள், மகாதல லோகத்தில் அசுரர்கள், ரஸாதல லோகத்தில் அசுரர்களின் ஆசான்கள் மற்றும் பாதாள லோகத்தில் வாசுகி முதலான பாம்புகள் வசிக்கின்றன.

இப்படி எல்லாம் சொன்னவர்கள், படித்தவர்கள், கேட்டவர்கள் இந்த உலகம் தவிர்த்து வேறு எந்த உலகத்தையும் பார்த்தது இல்லை என்பது மட்டுமே உண்மை.

…………..

கேள்வி : எவ்வளவு வயது ஆனாலும், மேலும் மேலும் பேரும், புகழும் பெறவேண்டும் என்று நினைப்பது ஏன்..?

  • எம்.பாண்டியராஜன், இந்திராநகர்.

ஞானகுரு :

வயதுக்கும் தெளிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. பேரும், புகழும் நிரந்தரம் இல்லை என்பதை உடல் தளர்ந்து, தனித்து விடப்படுகையிலே பலரும் உணர்கிறார்கள்.

Leave a Comment