மரணத்தை விரும்பலாமா..?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : மரணத்தை விரும்பி ஏற்பவர்கள் யார்?

  • பி.கனகலட்சுமி, பாண்டியன் நகர்.

ஞானகுரு :

உயிர் மீது ஆசை வைப்பதுதான் உயிரிகளின் பண்பு. உயிர் வாழப் போராடுவதுதான் வாழ்க்கை. கடைசி நொடி வரையிலும் வாழ்வதற்குப் போராட வேண்டும் என்பதுதான் உயிர்களின் விதி. இதையே மனிதர்கள் பின்பற்ற வேண்டும்.

வாழ்வதற்கு அஞ்சுபவர்களே மரணத்தை விரும்பி ஏற்கிறார்கள். தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்கள் மரணத்துடன் பிரச்னை முடிவதில்லை, அவர்கள் குடும்பத்தையும் விரட்டிவரும்.

கேள்வி : சாலை விபத்துகளுக்குக் காரணம் மனிதனின் அறியாமையா?

  • எம்.சந்திரமோகன், சாத்தூர்.

ஞானகுரு :

மனிதர்களின் அலட்சியம் மட்டுமே விபத்துகளுக்குக் காரணம். சாலை விதிகள் ஏற்படுத்தப்பட்டது பிறருக்காக மட்டும்தான் என்ற எண்ணம் ஒவ்வொரு மனிதருக்கும் உண்டு.

தனக்கு ஒரு தேவை ஏற்படும்போது மூன்று நபர்களுடன் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதும், ஒருவழிப் பாதையில் செல்வதும் தவறாகத் தெரிவதே இல்லை. தன்னால் கண் விழித்து நீண்ட நேரம் ஓட்டுவதற்கு முடியும் என்று நினைப்பவனும், எத்தகைய சூழலிலும் என்னால் வேகத்தை கட்டுப்படுத்த முடியும் என்று நினைப்பவரும்தான் விபத்துக்கு அதிக காரணம்.

ஒருவர் சரியாக இருப்பதால் மட்டும் விபத்தில் இருந்து தப்பிக்க முடியாது. யாராவது ஒருவர் தவறாக விதிமுறை மீறுவதும், வாகனங்கள் பராமரிப்பு இன்மையும் முக்கிய காரணமாகிறது.

Leave a Comment