டீஜ் ஏஜ் காதலை கண்டுபிடிப்பது எப்படி..?

லவ் ஃபார்முலா

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாறுதல் நடக்கும் டீன் பருவத்தில் காதல் வசப்படுவது இயல்பான ஒன்று. ஹார்மோன் தூண்டுதல் காரணமாக பிள்ளைகள் காதலில் விழுவதை பெற்றோரால் தடுக்க முடியாது. ஆனால் காதலிப்பவரை கண்டுபிடிக்க முடியும்.  

  • நிறைய நண்பர்கள் இருந்தாலும் குறிப்பிட்ட ஒருவர் பற்றி அடிக்கடி பேசுவார், அவர் ரொம்ப நல்லவர் என்று நிரூபிக்க ஆசைப்படுவார்.  
  • எந்த ஒரு விஷயம் என்றாலும் அவருக்கு இது பிடிக்கும், அவருக்கு இது பிடிக்காது என்று கூறுவார்.
  • தன்னை அழகாக்கிக் கொள்வதில் வழக்கத்தை விட அதிக நேரம் செலவிடுவார்.
  • வீட்டில் இருக்கும் ஸ்பெஷல் ஸ்வீட்டை குறிப்பிட்ட நபருக்கு யாருக்கும் தெரியாமல் எடுத்துப்போவார்.
  • கண்களைத் திறந்துகொண்டே கனவு காண்பார், தனக்குத்தானே சிரித்துக்கொள்வார்.
  • ஸ்பெஷல் க்ளாஸ், மாலை டியூஷன் என்று வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு நிறைய பொய் சொல்வார்.

டீன் ஏஜ் வயதில் காதல் சகஜம் என்றாலும், அதைக் கண்டுபிடித்து சரியாக வழி நடத்த வேண்டியது பெற்றோரின் கடமை. இந்த வயதில் பிள்ளைகளுக்கு சரியான வழி காட்டவில்லை என்றால் அவர்கள் எதிர்காலம் சிக்கலாகிவிடும்.

Leave a Comment