சூப்பர் டிப்ஸ்
அழகு, அறிவு, அடக்கம், அன்பு, பணிவு கொண்ட மணப்பெண் வேண்டும் என்று ஆண்கள் ஆசைப்படுகிறார்கள். உண்மை என்னவென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு சிறந்த தனித்தன்மை இருக்கும். ஆனால், ஒரே பெண்ணிடம் எல்லா குணங்களையும் எதிர்பார்க்க முடியாது. எந்த ஆணும் முழுமையானவன் இல்லை என்பது போன்று எந்த பெண்ணும் முழுமையானவர் அல்ல. எனவே, எப்படிப்பட்ட பெண்ணை தேர்வு செய்தால் எதை இழக்க வேண்டியிருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
- அழகான பெண்ணை தேர்வு செய்தால், அவள் அழகுக்கு பிரத்யேகமாக செலவழிக்கத் தயாராக இருக்க வேண்டும்.
- பணக்காரப் பெண்ணை தேர்வு செய்தால் அவமதிப்புகளை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
- வேலை செய்யும் பெண்ணை தேர்வு செய்தால், வீட்டு வேலைகளில் பங்கு போடும் அக்கறை இருக்க வேண்டும்.
- லட்சியவாதி பெண்ணை தேர்வு செய்தால், அவருடைய சாதனைக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டியிருக்கும்.
- அடிமை போன்ற பெண்ணை தேர்வு செய்தால், நிதி நிர்வாகத்தை எதிர்பார்க்கக்கூடாது.
- சுதந்திரம் பேசுபவரை தேர்வு செய்தால் அவரது பேச்சுக்கு கை தட்ட வேண்டும்.
- அன்பு காட்டும் பெண்ணை தேர்வு செய்தால் புத்திசாலித்தனத்தை எதிர்பார்க்கக்கூடாது.
- விதவையைத் திருமணம் முடித்தால் கடந்த காலத்தைப் பேசக்கூடாது.
- பணம் சம்பாதிக்க விரும்பும் பெண்ணை திருமணம் முடித்தால் அவரது தொழில் ஆர்வத்துக்குப் பங்களிக்க வேண்டியிருக்கும்.
ஒன்றை விட்டுக்கொடுத்தால் மட்டுமே வேறு ஒன்று கிடைக்கும். யாரும் இங்கே முழுமை இல்லை என்பதை புரிந்துகொண்டு மனதுக்கு விருப்பமான பெண்ணை தேர்வு செய்யுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
