உளவியல் உண்மைகள்
நான் எல்லோருக்கும் நல்லது செய்கிறேன். ஆனாலும், என்னை யாரும் புரிந்துகொள்வதில்லை. என்னை யாரும் மதிப்பதில்லை என்று நிறைய பேர் வருந்துகிறார்கள். ’புறக்கணிப்பவரைப் பார்க்காதீர்கள், எத்தனை பேர் மதிக்கிறார்கள் என்று கவனியுங்கள்’ என்று ஆலோசனை தருகிறார்கள் உளவியல் ஆலோசகர்கள்.
உண்மையில் உங்களை எத்தனை பேர் மதிக்கிறார்கள் என்று தெரியுமா?
- சூரியனும், சந்திரனும் எல்லோருக்கும் போலவே உங்களுக்கும் ஒளி தருகிறது.
- காற்றும் மழையும் உங்களை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை.
- எல்லோருக்கும் போலவே உங்களுக்கும் காலம் 24 மணி நேரத்தைத் தருகிறது.
- வெற்றிக்கான வாய்ப்புகள் எல்லோருக்கும் சமமாகவே இருக்கிறது.
இன்னொரு உண்மை தெரியுமா? சாதாரண நபர்களை நீங்களும் புறக்கணிப்பதுண்டு. உங்கள் பாராட்டு கிடைக்காமல் மனைவி, பிள்ளைகள், உறவுகள் வருத்தம் அடைவதுண்டு. அதை நீங்கள் கண்டுகொள்ளா மாட்டீர்கள். அதேநேரம், நீங்கள் பெரிதாக மதிக்கும் ஒரு நபர் புறக்கணித்தால் வேதனைப்படுகிறீர்கள்.
உண்மையில் யாரும் உங்களைவிட பெரியவர் இல்லை, சிறியவரும் இல்லை என்ற மனநிலைக்கு வந்துவிட்டால், யாருடைய புறக்கணிப்பும் உங்களுக்கு வேதனை தராது.
