மனிதருக்கு எத்தனை நாட்கள்..?

ஞானகுரு பதில்கள்

கேள்வி : ஒரு மனிதரின் அதிகபட்ச ஆயுட்காலம் எவ்வளவு?

  • சி.பாலசுப்பிரமணியன், விளாம்பட்டி.

ஞானகுரு

இந்த பிரபஞ்சத்தின் வயதைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, மனிதரின் ஆயுட்காலம் என்பது அற்பமான எண்ணிக்கை. கோடானு கோடி மனிதர்கள் இங்கு வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். ஆனால், வரலாறு ஆயிரக்கணக்கான மனிதர்கள் பெயரை மட்டுமே இன்றும் ஞாபகம் வைத்திருக்கிறது. அதாவது, மரணத்துக்குப் பிறகு ஒருவரை எத்தனை ஆண்டுகள் மனிதர்கள் ஞாபகம் வைத்திருக்கிறார்களோ, அத்தனை வருடங்கள் அவரது ஆயுட்காலம் என்று கணக்கிடலாம்.

இந்த வகையில் அலெக்சாண்டர், செங்கிஸ்கான், சாக்ரடீஸ், பிளேட்டோ, மகாவீரர், புத்தர், இயேசு, முகமது நபி, திருவள்ளுவர், ராஜராஜசோழன் போன்றவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள்.

அதேநேரம், தத்துவமாக பதில் வேண்டும் என்றால் மனித வாழ்வு என்பது ஒரு நொடி மட்டுமே. அதாவது, இந்த கணத்தில் மட்டுமே மனித வாழ்வு உயிர்ப்புடன் உள்ளது. கடந்த காலம் முடிந்துபோனது. எதிர்காலம் நிச்சயமில்லை. ஆகவே, ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழுங்கள். அதுவே சரியான வாழ்க்கை..

Leave a Comment