ஜவஹர்லால் நேருக்கு எத்தனை குழந்தைகள்

வரலாற்று ஆச்சர்யம்

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருக்கு குழந்தைகள் என்றால் ரொம்பவும் பிடிக்கும். எந்த நேரமும் குழந்தைகளுடனே நேரத்தைச் செலவிடத்தான் ஆசைப்படுவார்.

அதனால்தானே அவரது பிறந்தநாளை, குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறோம். ஆமாம்… நேருக்கு எத்தனை குழந்தைகள் தெரியுமா?

இந்திரா காந்தி மட்டும்தானே… ஏன் அவர் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ளவில்லை.

இதை நேருவிடமே ஒரு முறை பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

“எனக்கு நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள ஆசைதான். ஆனால் இளமைக் காலத்தில் எனக்கு சொந்த வாழ்க்கையை விட பாரதத்தின் விடுதலை எனக்கு முக்கியமாக இருந்தது. எந்த நேரத்தில் சிறை செல்வேன் என்று எனக்கே தெரியாது.

தந்தை பாசம் கிடைக்காமல் குழந்தை ஏமாறக்கூடாது என நினைத்தேன். மேலும் என் மனைவி கமலா அடிக்கடி நோயால் பாதிக்கப்படுபவர். அவர் உடல்நலம் கருதியும் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.’ என்று கூறியிருக்கிறார்.

குடும்பக் கட்டுப்பாடு அறிமுகமாகும் முன்னரே, அதை கடைப்பிடித்துக் காட்டிவிட்டார் நேரு. மேன்மக்கள், மேன்மக்களே.

Leave a Comment