ஆச்சர்ய தகவல்கள்
இப்போது ஒரு நாட்டின் கடற்படையின் பலத்தினை எதை வைத்து அளவிடுகிறார்கள் என்று தெரியுமா?
எத்தனை நீர்மூழ்கிக் கப்பல் வைத்திருக்கிறது என்பதைக் கொண்டுதான் கணக்கிடுகிறார்கள். பகைவரின் கப்பலைத் தாக்குவது, விமானந்தாங்கி கப்பல்களுக்கு பாதுகாப்ப்பு கொடுப்பது, எதிர் கப்பலின் முற்றுகையை முறியடிப்பது, நீரில் இருந்தபடியே நிலப்பகுதியைத் தாக்குவது, ஏவுகணை அனுப்புவது போன்ற பல பணிகளை செய்வதால் நீர் மூழ்கிக் கப்பலுக்கு மரியாதை ஜாஸ்தி.
நீர்மூழ்கிக் கப்பல் செயல்படும் விதம் எப்படி என்று தெரியுமா?
ரொம்ப சிம்பிள். நீர் மூழ்கிக் கப்பலை மிதக்க வைப்பதற்கு, காற்று அடங்கிய டாங்கி அடிப்பகுதியில் உள்ளது. இந்த இடத்தை கடல் தண்ணீர் கொண்டு நிரப்பினால், கப்பலின் எடை அதிகரித்து, கப்பல் கடலுக்கு உள்ளே போகிறது. கடல் நீரை வெளியேற்றினால் கப்பல் மேலே வந்துவிடும்.
நீர் மூழ்கிக் கப்பல் என்றாலும் அடி ஆழத்துக்குச் செல்லமுடியாது. அதிகபட்சம் 600 அடி ஆழம் வரையில்தான் செல்லமுடியும்.
