நிஜமான சைகாலஜி
பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் தர வேண்டியது மிகவும் அவசியம் என்றாலும் அவர்களைப் பற்றிய உளவியல் உண்மைகளை அறிந்துகொள்ளுங்கள்.
- மனதுக்குப் பிடித்த நபருடன் திருமணம் முடிந்துவிட்டால், பெற்றோர்களை கண்டுகொள்ள மாட்டார்கள்.
- வழக்கத்துக்கு மாறாக பெண் அமைதியாக இருக்கிறார் என்றால் பெரிய சண்டைக்கு தயாராகிறார் என்று அர்த்தம்.
- கணவரை விட பிள்ளைகள் மீது தான் அதிக அன்பு வைத்திருப்பார்கள்.
- உள்ளுணர்வு அதிகம் என்பதால் கணவர் பொய் பேசுவதை மிக எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள்,
- மற்ற பெண்கள் கணவரைப் புகழ்ந்தால் சந்தேகப்படத் தொடங்குவார்கள். ஆயிரம் கேள்வி கேட்டு தொந்தரவு செய்வார்கள்.
- செலவுக்குக் கணக்கு கேட்காத கணவரை ஆஹோ ஓஹோவென புகழ்வார்கள்.
- இயல்பாகவே பெண்கள் பாராட்டுக்கு ஏங்குபவர்கள். எனவே, உண்மை பேசுபவர்களை விட போலியாகப் புகழ்பவர்களை அதிகம் நம்புவார்கள்.
- சாதுவான ஆண்களை விட அடாவடியான ஆண்களை விரும்புவார்கள். அவர்களால் தான் பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்புவார்கள்.
- நீண்ட நாட்களாக விரும்புபவர்களை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்றாலும் யார் முதலில் காதலை சொல்கிறார்களோ, அவர்களையே காதலிப்பார்கள்.
- புறக்கணிக்கும் ஆண்களை எப்படியாவது மயக்கிவிட வேண்டும் என்று துடிப்பார்கள்.
- அடிக்கடி போன் செய்து பேசும் ஆண்களை பெண்களுக்குப் பிடிப்பதில்லை. சந்தேகப்படுவதாக நினைத்து வெறுத்துவிடுவார்கள்.
- எந்த காரணமும் இல்லாமல் பெண்கள் சிரிப்பதுண்டு, அதற்கெல்லாம் அர்த்தம் தேடுவது அவசியமில்லை.
பெண்களைப் புரிந்துகொண்டு சம உரிமை கொடுத்து அன்புடன் நடத்துங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
